மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பும் பணி
24 Mar 2026, 3:23 pm
<p><strong>மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பும் பணி</strong></p>
<p>கடலூர், மார்ச் 24- கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பும் பணியினை மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதி நிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கிலிருந்து இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணி களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, 20 சதவீதக் கூடுதல் கையிருப்பு டன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 30 சதவீதக் கூடுதல் கையிருப்புடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, காட்டு மன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 3,108 வாக்கு ப்பதிவு இயந்திரங்கள், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,367 வாக்களிப் பதை உறுதி செய்யும் கருவிகள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தந்தத் தொகுதி களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாது காப்பு மையங்களுக்குச் செவ்வாய்க்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, தேர்தல் அலுவலரின் நேர்முக உதவி யாளர் (பொது) செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
