தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது!

4 Jan 2026, 4:05 pm
தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது!
<p><strong>தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது!</strong></p> <p>தூத்துக்குடி/திருநெல்வேலி/ திருவள்ளூர், ஜன. 3 &ndash; அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால ஓய்வூதியப் பிரச்சினைக்குத் தமிழக &nbsp;அரசு கண்டுள்ள தீர்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது &nbsp;என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் &nbsp;செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, நெல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் அறிவிப்பு மற்றும் தற்போ தைய அரசியல் சூழல் குறித்து குறிப்பிட்டார். ஓய்வூதியத் திட்டத்திற்கு பாராட்டு கடந்த 2003-இல் அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை மீட்டெடுக்க &nbsp;அரசு ஊழியர்கள் நீண்டகாலமாகப் போராடி வந்த னர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த &nbsp;அதிமுக ஆட்சியில் இந்தப் போராட்டங்கள் ஒடுக்கப் பட்ட நிலையில், தற்போது திமுக அரசு &lsquo;உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை&rsquo; அறிவித் துள்ளது வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு &nbsp;தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட் டில் பாரபட்சம் காட்டி, கடும் நிதி நெருக்கடியை &nbsp;ஏற்படுத்தியுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது. அதேவேளையில், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக் கான ஓய்வூதியத்தை உயர்த்துவது, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட இதர கோரிக்கைகளையும் அரசு படிப் படியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதவெறி அரசியலுக்குக் கண்டனம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி மாநில அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும், வழிபாட்டுத் தலங்க ளில் ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டுத் தேவை யற்ற குழப்பங்களை விளைவித்து வருவதாகவும் பெ. சண்முகம் சாடினார். திருப்பரங்குன்றம் மற்றும் சுசீந்திரம் கோயில்களில் குழப்பத்தை ஏற்படுத்திய மதவெறி கும்பல்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய், பாஜகவின் இத்தகைய செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காப்ப தாகவும் விமர்சித்தார். கடன் சுமை குறித்து விளக்கம் தமிழகத்தின் கடன் சுமை குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் ரூ. 5 &nbsp;லட்சம் கோடி வரை கடன் வாங்கப்பட்டது என்றார். &nbsp;தற்போது வாங்கப்படும் கடன்கள் உட்கட்ட மைப்பு மேம்பாட்டிற்காகவும், நலத்திட்டங்களுக் காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றிய அரசுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கடன் &nbsp;மேலாண்மை முறையானதாகவே உள்ளது என்றும், பூரண மதுவிலக்கு என்பது நடை முறைக்குச் சாத்தியமற்றது என்பதே மார்க்சிஸ்ட் &nbsp;கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெளிவு படுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.