தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘சீமான் எடுத்துள்ள கடப்பாரை அவரது கோட்டையையும் இடிக்கும்!’

14 Dec 2025, 3:45 pm
‘சீமான் எடுத்துள்ள கடப்பாரை அவரது கோட்டையையும் இடிக்கும்!’

‘சீமான் எடுத்துள்ள கடப்பாரை அவரது கோட்டையையும் இடிக்கும்!’

“பிராமணக் கடப்பாரை கொண்டு பாழடைந்த திராவிடக் கோட்டையை இடிப்பேன்”

- திருவாளர் சீமான் அவர்களின் அன்புத் தம்பிமார்கள், தங்கள் தலைவன் இப்படி பேசியதை ஏற்றுக் கொள்வார்களா? அதுமட்டுமல்ல, பேசிய மேடை ‘விஜில்’ என்ற அமைப்பின் மேடை. சங்பரிவாரங்களின் பல கொடுக்குகளில் இதுவும் ஒன்று. அதாவது ஆர்எஸ்எஸ்-இன் துணை அமைப்பு. சீமான், பிராமணியம் என்பதை ‘இடிப்பதற்கான கடப்பாரை’ என்று கூறியதன் மூலம், ஒரு உலக உண்மை யை ஒப்புக் கொண்டு பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்தக் கடப்பாரை  எதையெல்லாம் இடித்துத் தள்ளியது என்பது நீண்ட வரலாறு. வர்ணமில்லா சமூகத்தை இடித்து, நால்வர்ண சமூ கத்தை கட்டமைத்தது அந்தக் கடப்பா ரைதான். ‘பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்’ என்ற பேதமற்ற சமூகத்தை  இடித்துவிட்டு, பிறப்பால் உயர்வு-தாழ்வை கட்டமைத்தது அந்தக் கடப்பாரைதான். இந்துக்களின் அமைப்பு என்று பொய்யுரைத்து, இந்தியாவின் இறையாண்மையை இடித்துத் தள்ளி, இந்து ராஷ்டிராவை உருவாக்கத் துடிப்பதும் அந்தக் கடப்பாரைதான். ஜனநாயகக் காற்றை இந்திய மக்கள் சுவாசிப்பதற்கு உறுதிப்படுத்திய நமது அரசமைப்புச் சட்டம் என்ற மாபெரும் கோட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்துவிட்டு, மநு(அ)தர்ம சட்டத்தின் ஆட்சியை கொண்டு வரத் துடிப்பது அந்தக் கடப்பாரைதான். ஆண்டாண்டு காலமாய் அடுக்கி வைக்கப்பட்ட மூட்டை களில், அடி மூட்டையாக இருக்கும் தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கோட்பாட்டை இடித்துத் தள்ள விரும்புவதும் அந்தக் கடப்பாரைதான். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷனை அமல்படுத்திய போது, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு எனும் முன்வைப்பை பொறுக்கமாட்டாமல், முறியடிக்க முற்பட்டதும் அந்தக் கடப்பாரைதான். இவ்வளவு ஏன்.. 1992-இல் உண்மையாகவே இரும்புக் கடப்பாரைகளை கைகளில் கொடுத்து பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியமன் மூலம் இந்தியாவின் ‘மத நல்லிணக்கப் பாரம்பரியம்’ எனும் மகத்தான கோட்டையை தகர்த்ததும் அந்த பிராமணியக் கடப்பாரைதான். 2002  ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா சம்பவத்தை ஏற்பாடு  செய்துவிட்டு, அதற்கு எதிர்வினையாக ஒரு இனப்படுகொலை யையே நடத்திக் காட்டி, உலகமே வெட்கித் தலைகுனியும் வகையில் ‘மனிதாபிமானம்’ எனும் உன்னதமான கோட்பாட்டை இடித்ததும் இதே கடப்பாரைதான்.  இப்படியான இந்த கொடூரமான, குரூரமான கடப்பாரையை திருவாளர் சீமான் கையில் எடுத்திருக்கிறார். அதுவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மேடையில் கையில் எடுத்திருக்கிறார். வேறொன்றும் இல்லை. அவருடைய தம்பிமார்கள், இந்தக் கடப்பாரை திராவிடக் கோட்டையை இடிக்கிறதோ இல்லையோ, தங்களது எதிர்காலம் எனும் கனவுக் கோட்டையை இடித்துத் தள்ளாமல் பார்த்துக் கொள்வதற்கு சற்று யோசிக்க வேண்டும். - வசந்தன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.