முந்தய பக்கம்

திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண்தான்!

12 Dec 2025, 3:12 pm
திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண்தான்!
<p>மதுரை, டிச.12 - திருப்பரங்குன்றத்தில் இருப் பது தீபத்தூண் அல்ல; சர்வே தூண் என்று ஆர்டிஐ கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன் றம் மலையில் உச்சிப் பிள்ளை யார் கோவில் அருகே தீபம் ஏற்றப் படும் தூணுக்கு பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைக்கான சர்வே &nbsp;தூணில் தீபம் ஏற்ற பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இது &nbsp;சர்வே கல் தூண் என பல்வேறு தொல்லியல் &nbsp;ஆதாரங்களும் தொடர்ந்து காட்டப்பட்டு வரு கிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள தூண் குறித்து திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் 2022 ஜனவரியில் ஆர்டிஐ மூலம் கேட்டிருந்தார். இதற்கு அதே ஆண்டு மார்ச் மாதம் &nbsp;இந்திய நில அளவைத்துறை அளித்துள்ள பதிலில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான் என தெரி விக்கப்பட்டுள்ளது. 1808 முதல் 1809, 1871 ஆம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலை யில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன என &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதம் &nbsp;தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram