முந்தய பக்கம்

“ஆளுநருக்கு உச்சநீதிமன்றம்  குட்டுதான் வைத்துள்ளது”  

25 Nov 2025, 3:29 pm
“ஆளுநருக்கு உச்சநீதிமன்றம்  குட்டுதான் வைத்துள்ளது”  
<p><strong>&ldquo;ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் &nbsp;குட்டுதான் வைத்துள்ளது&rdquo; &nbsp;</strong></p> <p>அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி சென்னை: திராவிடம் கற்பனை என்றும், தமிழ் நாட்டில் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த பேட்டிக்கு அமைச்சர் எஸ். ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் &nbsp;ரகுபதி, &ldquo;திராவிடம் கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருப்பது ஆளுநருக்கு தெரி யாதா? தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதே ஆளுநரின் வேலை. கமலாலயத்திற்கு வேலை செய்ய வேண்டியவர் தவறுதலாக ஆளுநர் மாளிகைக்கு வந்துவிட்டார்&rdquo; என்று கடுமையாக விமர்சித்தார். &ldquo;திமுக அரசு யாருக்கும் எதிரான அரசு அல்ல. உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டுதான் வைத்துள்ளதே தவிர &nbsp;பாராட்டியது இல்லை. தேர்தல் நெருங்குவதால் ஆளுநர் வீணாக பழி சுமத்துகிறார். தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது. இந்தியை வைத்து மலிவான அரசி யல் செய்யும் பழக்கம் எங்களுக்கு இல்லை&rdquo; என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram