தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெருவில் மழைநீர் தேங்கி குளமாக மாறிய அவலம்! அடிப்படை வசதிக்கு 30 ஆண்டுகளாக ஏங்கும் பொதுமக்கள்!

22 Mar 2026, 4:19 pm
தெருவில் மழைநீர் தேங்கி குளமாக மாறிய அவலம்! அடிப்படை வசதிக்கு 30 ஆண்டுகளாக ஏங்கும் பொதுமக்கள்!
<p><strong>தெருவில் மழைநீர் தேங்கி குளமாக மாறிய அவலம்! அடிப்படை வசதிக்கு 30 ஆண்டுகளாக ஏங்கும் பொதுமக்கள்!</strong></p> <p>தருமபுரி, மார்ச் 22- சாலை, கழிவுநீர் கால்வாய் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு &nbsp;30 ஆண்டுகளாக போராடி வரும் &nbsp;மக்களின் கோரிக்கையை மாவட்ட &nbsp;நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், வீரப்பன்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நக ரில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இக் கிராமத்திற்கு சாலைகள், கழிவு நீர் வடிகால், மின்சாரம், குடிநீர் விநி யோகம் போன்ற அடிப்படை வசதி கள் கடந்த 30 ஆண்டுகளாக செய்து &nbsp;தரவில்லை. இதுதொடர்பாக 30 &nbsp;ஆண்டுகளாக ஆட்சியர், வட்டாட்சி யர், வட்டார வளர்ச்சி அலுவலர், &nbsp;கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட &nbsp;அனைத்து அதிகாரிகளிடமும் மனு &nbsp;அளித்தபோதிலும், எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மற்றும் அதிகாரிகளால் &nbsp;தொடர்ந்து புறக்கணிக்கப்படுவ தாகவும், இது தங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் தெருக் களில் மழைநீர் தேங்குவதால், சிறு வர்கள் முதல் முதியோர்கள் வரை கீழே விழுந்து கை, கால் முறிவு ஏற்படுகிறது. தண்ணீர் நிற்பதால் தொற்று நோய்கள் பரவுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். திடீரென்று பெய்த &nbsp;கனமழையால் அண்ணா நகர தெருக்கள் குளம் போல மழைநீர், &nbsp;கழிவுநீர் தேங்கி நின்றன. இதனால் &nbsp;பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிராம மக்கள் ஒன்றி ணைந்து மின் மோட்டார் பயன்ப டுத்தி தெருக்களில் தேங்கிய நீரை &nbsp;அகற்றினர். நீண்ட நாட்களாக மனுக் கள் அளித்தும் நடவடிக்கை இல் லாததால், தேங்கிய மழை, கழிவு &nbsp;நீரில் கிராமத்தை சேர்ந்த பெண்கள் &nbsp;நெற்பயிர் நட்டும், குழந்தைகள் காகிதத்தில் கப்பல் செய்து விட்டும் &nbsp;அமைதி போராட்டமாக எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே, அண்ணா நகர் மக்க ளுக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என &nbsp;அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட &nbsp;நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.