தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மழைநீரை மதிப்பு மிக்க சொத்தாக மாற்றும் ஒரு நாட்டின் கதை

7 Feb 2026, 1:22 pm
மழைநீரை மதிப்பு மிக்க சொத்தாக மாற்றும் ஒரு நாட்டின் கதை
<p><strong>மழைநீரை மதிப்பு மிக்க சொத்தாக மாற்றும் ஒரு நாட்டின் கதை</strong></p> <p>&ldquo;கழிப்பறையில் சாம்பல் நீரைப் பயன்படுத்துவதில் இருந்து சீனா மழை நீரை எவ்வாறு மதிப்பு மிக்க சொத்தாக கருதுகிறது என்பதை உலகம் புரிந்துகொள்ளும்&rdquo;. மே 2023 இல் ஒரு நாள் மாலைப் &nbsp;பொழுது. புகழ்பெற்ற தைவானின் மேடே (Mayday) இசைக் குழுவினர் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி மழை யால் பாதிக்கப்படுமோ என்ற கவலை இரசிகர்களிடையில் ஏற்பட்டது. பறவைக் கூடு 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக் &nbsp;போட்டிகளுக்காக கட்டப்பட்டிருந்த தேசிய ஸ்டேடியத்தில் பறவையின் &nbsp;கூடு (Bird&rsquo;s Nest) என்றும் அறி யப்படும் மேடைக்கு இசைக் கலை ஞர்கள் அழைத்துவரப்பட்டனர். உண்மையான ஒரு பறவையின் கூடு போலவே கட்டப்பட்டிருந்ததால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த அமைப்பு எஃகினால் கட்டப்பட்ட துளைகளுடன் கூடியது. பின்னலின் வெளிப்புறம் இரத்தக் &nbsp;குழாய்கள் நம் உடலில் இருப்பது போல இக்குழாய்களால் இந்தப் பின் &nbsp;னல் நெய்யப்பட்டுள்ளது. பெய்யும் மழைநீர் வடிகட்டப்பட்டு வெளியில் அனுப்பப்படுகிறது. இந்த நீர் மைதா னத்தில் இருக்கும் மூன்று நிலத்தடி &nbsp;நீர்த் தொட்டிகளில் ஒன்றில் சேக ரிக்கப்படுகிறது. இது வடிகட்டப்பட்டு கட்டிடத்தில் கழிப்பறை பயன்பாடு, ஓட்டப் பாதைகளை சுத்தம் செய் &nbsp;தல், புல்வெளிகளுக்கு நீர் பாய்ச்சு தல் போன்ற செயல்களுக்கு பயன்படு கிறது. பறவைக் கூடு அமைப்பைச் சுற்றி யுள்ள இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் &nbsp;மொத்தம் 58,000 டன் நீரை மறு சுழற்சி செய்கின்றன. நகர்ப்புற மழை நீர் அறுவடை (URWH) என்ற இத் திட்டம் சீனாவின் மழைநீர் அறுவடை இயக்கத்தின் முன்னோடித் திட்டம். &nbsp;சீனா முழுவதும் முக்கிய கட்டடங்கள் &nbsp;அனைத்தும் இத்திட்டத்தை மைய மாக வைத்தே எழுப்பப்பட்டுள்ளன. பறவைக் கூடு அமைப்பிற்கு எதிரில் இருக்கும் தேசிய நீர் வள மையம் ஒவ்வொரு ஆண்டும் 10,000 டன் மழைநீரை அறுவடை செய்கிறது. இது 100 வீடுகள் பயன்படுத்தும் நீரின் அளவிற்கு சமமானது. ஒவ் வொரு ஆண்டும் 50 மில்லியன் கன &nbsp;மீட்டர் மறுசுழற்சி நீரை பெய்ஜிங் நக ரம் பயன்படுத்துகிறது. குளியலறை நீர் போன்ற மற்ற &nbsp;மூலங்களில் இருந்து வரும் நீர் &nbsp;உட்பட பெய்ஜிங் தன் தேவைகளுக் காக 30% மறுசுழற்சி நீரையே பயன் படுத்துகிறது. 2022 இல் டி ஜே ஐ (DJI) என்ற &nbsp;சிறிய ரக ஆளில்லா விமான நிறு வனம் சென்ஷென் (Shenzhen) நகரில் தன் இரண்டு புதிய அலு வலக கட்டிடங்களின் மேற்பகுதி யில் தோட்டங்கள் மற்றும் புல்வெளி களுக்கு நீர் பாய்ச்ச உதவும் மழைநீர் சேமிப்பு வசதிகளை அமைத்தது. இந்த நீர் தாவரங்களை வளர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இட்திட்டம் ஸ்பாஞ்ச் நகரம் (sponge city) என்ற திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பாரம்பரிய வீட்டின் அமைப்பு பழமையான நீர்த் திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படும் இவை டுரென்ஸ்கேப் (Turenscape) &nbsp;என்ற புகழ்பெற்ற நிலப்பரப்பு அமைப்பு நிறுவனத்தின் தோற்றுந ரான யூ கான்ஜியன் (Yu Kongjian) என்ற கட்டடக் கலை நிபுணரால் முதல்முறையாக நவீன யுகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஸ்பாஞ்ச் நகரத் திட்டம் பசுமை யிடங்கள், ஈர நிலங்கள் மற்றும் நீரை அனுமதிக்கும் நடைபாதைகளில் பயன்படுகிறது. இது பாரம்பரிய வடிநீர் அமைப்பு களுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படு வதையும் குறிப்பாக ஈரப்பதம் உள்ள &nbsp;தெற்கு சீனாவில் தடுக்கிறது. பருவ கால வறட்சி நிலவும் வட சீனாவில் இத்திட்டம் பொருத்தமானது. சீனா வில் க்யுன் (Qin) மற்றும் ஹேன் (Han) அரசா வம்சத்தினரின் ஆட்சிகாலம் முதலே மழைநீரை சேகரிக்கும் குளங்கள் வெட்டப்பட்டன. &ldquo;சீனாவிற்கு மழைநீர் அறுவடை யில் எப்போதும் நாட்டம் உண்டு. &nbsp;பாரம்பரிய வீடுகளில் மையப்பகுதி யைச் சுற்றிலும் கட்டடங்கள் அமைந் &nbsp;திருக்கும். வீடுகளின் மேற்கூரை களில் விழும் மழைநீர் வெளியில் செல்லாத வகையில் வீட்டிற்குள் அமைந்திருக்கும் கிணறுகளில் சேக ரிக்கப்படுகிறது. இவ்வாறு குடும்ப வீடு களில் எல்லா வழிகளிலும் நீர்ச் செல் &nbsp;வம் சேமிக்கப்படுகிறது. பழங்காலம் முதலே சீன மக்கள் நீர் வளப் பயன் &nbsp;பாட்டை மதிப்பு மிக்க ஒன்றாகக் கருது கின்றனர். மழை நீர் சேமிப்பு என்பது மக்களின் டி என் ஏவில் ஊறிப் போனது&rdquo; என்று டுரென்ஸ்கேப் நகர சூழல் ஸ்டூடியோவின் இயக்குநர் ஜெனரல் வாங் டாங் (Wang Dong) கூறுகிறார். &nbsp;பாலைவனங்கள் உள்ள வட &nbsp;சீனா லான்சௌ (Lanzhou) நகரில் &nbsp;சீன கம்யூனிஸ்ட் கட்சி மழைநீர் அறு வடை பற்றிய முதல் தேசிய கருத்த ரங்கை நடத்தியது. 2008 ஒலிம்பிக் &nbsp;மைதானத்தின் வடிவமைப்பு சீனா விற்கு உலகிற்கு இத்திட்டத்தை எடுத்துக்காட்ட ஒரு சரியான வாய்ப்பைத் தந்தது. இத்திட்டம் 2000 களில் புகழ்பெறத் தொடங்கியது. 2014 இல் இது சீன தேசிய திட்டமிட லின் அடிப்படையாக அமைந்தது. நகரங்களில் 70% மறுசுழற்சி நீரை &nbsp;பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. 2023 இல் சேமிப்புத் தொட்டிகள், வடிகட்டிகள் போன்ற மழைநீர் அறுவடைக்கு உதவும் கருவிகளின் உற்பத்தித் தொழில் 126 பில்லியன் யுவான் (Yuan)/13.5 பில்லியன் பவுண்டாக அதிகரித்தது. சூழலுக்கு நட்புடைய கட்டடங்களில் வாழும் மக்கள் மழைநீரை மறுபடி பயன்படுத்து வதும் கட்டடத்தின் குழாய்கள் வழி யாக பம்ப் செய்வதும் சேமிப்பது போல எளிதானதில்லை. கட்டிடங்கள் &nbsp;இதற்காக திறம்படச் சேகரிப்பது, சுத்தப்படுத்துவது, மறுபடி பயன் &nbsp;படுத்துவதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். மறுசுழற்சி சாம்பல் நீர் தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீருடன் கலக்காத வகையில் கட்டிடங்கள் கட்டப்படவேண்டும். &ldquo;மழைநீரை மறுபடி பயன் படுத்தும் கட்டிடங்களை அமைப்பது சீனாவின் வளர்ச்சிக்கான செயல் முறையாக உள்ளது. மக்களுக்கும் சூழலிற்கும் நன்மை செய்யும் இது &nbsp;போன்ற கட்டிடங்களை வடிவமைப் பது நிபுணர்களுக்கு சவாலானது. என்றாலும் இதனால் சூழலிற்கு நட்புடைய சுற்றுப்புறத்தில் வாழ்கி றோம் என்ற எண்ணம் மக்களிடை யில் ஏற்படுகிறது&rdquo; என்று ஃபாஸ்ட்டர் &nbsp;மற்றும் பார்ட்னர்கள் (Foster and Partners) என்ற கட்டடக்கலை நிறு வனத்தின் மூத்த பங்காளியும் மழை நீர் அறுவடைத் திட்டத்தை டிஜேஐ &nbsp;போன்ற நாட்டின் பல்வேறு கட்ட டங்களில் செயல்படுத்தியவருமான டான் சைபெர்ட் (Dan Sibert) கூறு கிறார். &ldquo;கழிப்பறையில் சாம்பல் நீரைப் பயன்படுத்துவதில் இருந்து சீனா மழை நீரை எவ்வாறு மதிப்பு மிக்க சொத்தாக கருதுகிறது என்பதை உல கம் புரிந்துகொள்ளும்&rdquo; என்று இந்த கட்டுரையின் ஆய்வாளர்களான லில்லியன் யாங் (Lillian Yang) மற் &nbsp;றும் ஜைசன் சூகுவான் லூ (Jason Tzu &nbsp;Kuan Lu) ஆகியோர் கூறுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.