தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றும் இல்லாத மோடி அரசின் பட்ஜெட் நிலைகுலைந்த பங்குச் சந்தை ரூ.10 லட்சம் கோடி இழப்பு  

1 Feb 2026, 3:51 pm
ஒன்றும் இல்லாத மோடி அரசின் பட்ஜெட் நிலைகுலைந்த பங்குச் சந்தை ரூ.10 லட்சம் கோடி இழப்பு  
<p><strong>ஒன்றும் இல்லாத மோடி அரசின் பட்ஜெட் நிலைகுலைந்த பங்குச் சந்தை ரூ.10 லட்சம் கோடி இழப்பு</strong> &nbsp;</p> <p>இந்தியாவில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின் &nbsp;ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக் &nbsp;கல் செய்யபட்டது. பொதுவாக &nbsp;ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் பட்ஜெட்டை ஒட்டி பங்குச் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு, ஞாயிறன்று &nbsp;செயல்பட்டது. இந்நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட &nbsp;வரி &nbsp;மாற்றங்கள் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் நாட்டின் &nbsp;பங்குச் சந்தைகள் நிலைகுலைந்தன. எதிர் கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இந்த குறுகிய கால மற்றும் &nbsp;நீண்ட கால மூலதன ஆதாய வரிகளில் செய்யப்பட்ட &nbsp;மாற்றங்கள் முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்த கத்திற்கான வரி உயர்த்தப்பட்டது சந்தை சரிவுக்கு ஒரு &nbsp;முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் &nbsp;நுகர்வுத் திறனை அதிகரிக்க அல்லது நடுத்தர வர்க்கத் &nbsp;தினருக்குப் பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படா தது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என முத லீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால் படஜெட் நிறைவு பெற்றப் பின், மும்பை &nbsp;பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட &nbsp;சென்செக்ஸ் 1,546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 என்ற அளவில் நிறைவடைந்தது. வர்த்த கத்தின் ஒரு கட்டத்தில் இது 2,800 புள்ளிகளுக்கும் மேல் &nbsp;சரிந்தது. அதே போல தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிப்டி சுமார் 495.20 &nbsp;புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 என்ற அள வில் முடிவடைந்தது. மிக முக்கியமாக பட்ஜெட் அறி விப்பால் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டா ளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் கரைந்துள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.