தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோடி மனங்களில் எழுந்த மார்க்ஸ் சிலை !

14 Feb 2026, 1:48 pm
கோடி மனங்களில் எழுந்த  மார்க்ஸ் சிலை !

கோடி மனங்களில் எழுந்த  மார்க்ஸ் சிலை !

சிலை வடித்த சிற்பியின் இதய மொழி பிப்ரவரி 6 அன்று கன்னிமாரா நூலகத்தில் திறக்கப்பட்ட மாமேதை  காரல் மார்க்ஸ் சிலை வடித்த சிற்பி கார்த்திகேயன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த நேர்காணல்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற  இடி முழக்கத்தை உலகெங்கும் எதிரொ லிக்கச் செய்த தத்துவ மாமேதை காரல் மார்க்ஸ்.  அவரது சிலை சென்னை கன்னிமாரா நூலக வாயிலில்  வெண்கல வடிவில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது”. அந்த  உலோகத்துக்குள் உயிர் ஊட்டியவர் யார்? களிமண்ணில்  கொள்கையைப் பொறித்த அந்தக் கைகள் யாருடை யவை? என்பது பலருடைய கேள்வியாகும். சென்னை அருகே மலையம்பாக்கம் கிராமத்தி லிருந்து வந்த ஒரு சாதாரண சிற்பி என்.எஸ். கார்த்தி கேயன். தன் 34 ஆண்டு கால அனுபவத்தில் செய்த மிக வும் அர்த்தமுள்ள வேலை இது. இது, அவரது வாழ் நாள் சாதனை மட்டுமல்ல, அவரது வாழ்க்கையையே மாற்றிய கலைப்பயணம். உளியில் தொடங்கிய வாழ்க்கைப் பயணம் “என்னுடைய கைகளுக்கு புத்தகத்தை விட உளி தான்  பழக்கம்” என்று புன்னகையுடன் தொடங்குகிறார் கார்த்தி கேயன். படிப்பைவிட ஓவியத்தில் ஆர்வம் கொண்ட சிறு வனை அவரது பெற்றோர் வேலுசாமி என்னும் சிற்பக் கலை  ஆசிரியரிடம் அனுப்பி வைத்தனர். அந்த ஆசிரியரே அவ ரைப் பட்டை தீட்டினார். அதன் பிறகு, 34 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். “குறைந்தபட்சம் 44 ஆயிரம் சிலைகளை இதுவரை  வடிவமைத்திருக்கிறேன்” என்று அவர் சொல்லும்போது அது பெருமையாக அல்ல. ஒரு கைவினைஞனின் நேர்மை யான கணக்காகத் தெரிகிறது. கோவில் தெய்வங்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் பெரியார்கள் என்று பல விதமான சிலைகளை செய்திருக்கிறார். ஆனால் இவற்  றில் காரல் மார்க்ஸ் சிலை மட்டும் வேறு. “எனது 34 ஆண்டு கால அனுபவத்தில், முழு சுதந்தி ரத்துடனும் ஈடுபாடுடனும் மனதிருப்தியுடன் செய்த சிலை  என்றால் அது ‘காரல் மார்க்ஸ்’ தான். இது என் நீண்ட நாள்  லட்சியமும் கனவும் நிறைவேற்றிய சிலை” என்கிறார். முதலமைச்சரின் கனவும்  ஒரு சிற்பியின் பொறுப்பும்! காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்படும்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறி வித்தவுடன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தது சிற்பி கார்த்திகேயனுக்கு. “இது வரை நீ செய்த சிலைகளை விட இது மிக முக்கியமானது.  புதுமையானது. உன் முழுத் திறமையையும் காட்டு” என்று  ஒரு படத்தைக் காண்பித்தார். “இது யார்?” என்று கார்த்திகேயன் கேட்டபோது, “இவர்தான் காரல் மார்க்ஸ். இந்தப் படத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே வடிவமைக்க வேண்டும். ஒரு  துளி கூட மாற்றம் கூடாது. இவை அனைத்தும் முதல மைச்சர் கூறியது” என்று அமைச்சர் கூறிய அந்த வார்த்தை களில் இருந்த அடர்த்தி, கார்த்திகேயனுக்கு அந்தப் பணி யின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஒரு போராளியின்  வலியை உணர்ந்த தருணம் ஆரம்ப கட்டப் பணிகளை முதலமைச்சரிடம் காட்டிய போது அவருக்குத் திருப்தி இல்லை. “காரல் மார்க்ஸ்  சிலை வடிவமைப்பதில் முதலமைச்சர் ஏன் இவ்வளவு  அக்கறை எடுத்துக் கொள்கிறார்?” என்று கார்த்திகேயன் யோசித்தார். பதில் தேடி யூடியூப்பில் மார்க்ஸைப் பற்றிய  வீடியோக்களைப் பார்த்தார். அவரது வாழ்க்கையைப் படித்தார். அப்போதுதான் அவரது இதயம் கனத்தது. “மார்க்  சின் மனைவி குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது ரத்தம் வந்தது என்று படித்தபோது என் கண்கள்  குளமாகிவிட்டன” என்கிறார் கார்த்திகேயன். அத்தகைய  வறுமையில் குடும்பம் வாடியபோதும், உலக உழைக்கும்  மக்களுக்காகப் போராடிய ஒரு தலைவன். அவருடைய வாழ்க்கையின் உள்பொருளை உணர்ந்துகொண்டார் கார்த்திகேயன். “அப்போதுதான் புரிந்தது, மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு போராளியின் சிலை இது. அதனால்தான் முதலமைச்சர் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார்.” முழுமையை நோக்கிய பயணம் லண்டன் சென்றிருந்த முதலமைச்சர், அங்கிருந்தே சிலையின் புகைப்படத்தைப் பார்த்து மாற்றங்களைச் சொன்னார். முகம், கழுத்து, கை, உடல், கால் என்று  தனித்தனியாக அனைத்துப் பாகங்களையும் முதலமைச்ச ரின் அறிவுரைப்படி வடிவமைத்தார் கார்த்திகேயன்.  வழவழப்பான (Smooth) பினிஷிங் இல்லாமல், ‘இம்பாஸ்டோ’ (Impasto) நுட்பத்தைப் பயன்படுத்தி, களிமண்ணில் வேலை செய்து தழும்புகள் அப்படியே  வெண்கலத்தில் வார்க்கப்பட்டது. அது கார்த்திகேயனின் நீண்ட நாள் கனவு. சிலை திறப்புக்குச் சில தினங்களுக்கு முன்பு மாதி ரியை முதலமைச்சருக்கு அனுப்பினர். இதிலும் முதல மைச்சருக்கு திருப்தியில்லை. “ஜெர்மனியில் உள்ளது  போன்று வண்ணம் பூச வேண்டும்” என்று விரிவான பட்டியல் கொடுத்தார். “ஒரு சிலையை வடிவமைப்பதில் முதலமைச்சர் இவ்வளவு கவனம் செலுத்துவதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்களும் முழு மனதுடன், கவனத்துடன் வேலை செய்தோம்” என்கிறார் கார்த்திகேயன்.  சுயநலமும் பொதுநலமும்  “பெரியார், ராஜாஜி, கலைஞர் போன்ற தலைவர் களின் சிலைகளை முன்பு செய்திருக்கிறேன். ஆனால் காரல் மார்க்ஸ் சிலைக்கும் அவற்றுக்கும் உள்ள வேறு பாடு என்ன தெரியுமா?” என்று கேட்கிறார் கார்த்தி கேயன். “ஒரு சிலையை வடிவமைக்கும் முன் அவர்கள் யார் என்று பார்ப்பேன் - தேசத் தலைவர்களா, சித்தர்  களா, சாமானியர்களா என்று. ஆனால் மார்க்ஸ் சிலையை  வடிவமைக்கும்போது மட்டும் சுயநலத்திற்கு வாழ்ப வர்களுக்கும் பொதுநலத்திற்காக வாழ்பவர்களுக்கும் உள்ள அதிக வித்தியாசத்தை முழுமையாகப் பார்த்தேன்.” “ஒரு போராளியின் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை முதலமைச்சர் நம்மிடம் கொடுத்தார் என்பதை  உணர்ந்தேன். அந்த வறுமையை மார்க்ஸின் சிலை யில் காட்ட வேண்டும், அந்த வெற்றியும் தெரிய வேண்டும்  என்று நினைத்தேன். அதில் வெற்றி பெற்றுவிட்டேன்” என்கிறார் பெருமிதத்துடன். “நம்மால் ஒரு வீட்டில் உள்ளவர்களையே மாற்ற முடிய வில்லை. ஆனால் காரல் மார்க்ஸ் எத்தனை நாடுகளில் புரட்சியை ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எத்தகைய வழி காட்டினார் என்பதை நினைக்கும்போது இது மிகவும் சர்வ சாதாரணமானது அல்ல.” அங்கீகாரம் தந்த தருணங்கள் “பொதுவாக சிலை திறப்பு விழாக்களில் பங்கேற்க மாட்டேன். சிலையை வடித்துக் கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன். ஏனென்றால் புகழ்ச்சியை விரும்புவதில்லை. ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் முக்கியம், ஆனால் புகழ்ச்சி ஆபத்து” என்கிறார் கார்த்தி கேயன். ஆனால் இந்த விழாவுக்கு அழைப்பு வந்தது. “மற்ற வர்களைப் போல ஒருவனாகத்தான் பங்கேற்றேன். ஆனால் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்த சில  நிமிடங்களில் அமைச்சர் வேலு அழைத்தார். முதல மைச்சர் எனக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.  அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது” என்று அந்தத் தருணத்தை நினைவு கூர்கிறார். “திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி என்று  பல கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் என்னையும் அமர வைத்தது மேலும் சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றையும் விட, கம்யூனிஸ்ட் கட்சித்  தோழர்கள் அனைவரும் மார்க்ஸ் சிலை முன் என்னோடு  புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த நிகழ்வு... இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்நாளில் நடந்ததில்லை. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் சண்முகம் பாராட்டினார். கட்சியின் தலைமை அலு வலகத்திற்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அவர்களின் பாராட்டில் நேர்மையும் உண்மையும் இருந்தது. அதை வார்த்தையில் சொல்ல முடிய வில்லை” என்று உணர்ச்சி பொங்க பேசுகிறார். களிமண்ணிலிருந்து கொள்கைக்கு “உயிரோட்டமான மார்க்ஸ் சிலையை அமைத்ததிலி ருந்து எனக்குள்ளும் என்னை அறியாமல் மார்க்ஸ் கொள்கைகள் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டன” என்று ஒரு அற்புதமான மாற்றத்தைப் பகிர்ந்து கொள்கி றார் கொள்க் கார்த்திகேயன். “இந்தச் சிலை வடிவமைப்பதைத் தொடங்கியதிலி ருந்து என்னுடன் வேலை செய்யும் அனைவரையும் சம மாக மதிக்கிறேன். அவர்களும் எனக்குத் துணையாக நின்றார்கள்.” “நான் உரிமையாளராக இருந்து சம்பாதிக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நான்  பணம் கொடுக்கிறேன். ஆனால் உண்மை என்னவென் றால், அவர்களால்தான் நான் வாழ்கிறேன். என்னால் அவர்கள் வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் காரல்  மார்க்ஸின் தத்துவம்தான்” என்கிறார் கார்த்திகேயன். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று காரல் மார்க்ஸ் அன்றைக்கு எழுதியது இன்றைக்கும் பின்பற்றப்படுகிறது. நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.” கோடி மனங்களில் எழுந்த சிலை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையப் பகுதி யில், உலகப் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில், தின மும் மக்கள் கூட்டம் வந்து செல்லும் இடத்தில் காரல்  மார்க்ஸின் முழு உருவச் சிலையை நிறுவிய முதலமைச்ச ருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்ல லாம் என்கிறார் கார்த்திகேயன். அவர் மேலும், “பேருந்தில்  செல்லும்போதே மார்க்ஸ் சிலை அனைவரின் பார்வை யிலும் படும்படி எழுந்திருக்கிறது. கோடிக் கணக்கான மக்களின் மனதில் சிலையாக எழுந்திருக்கிறார்” என்கிறார். மலையம்பாக்கம் கிராமத்திலிருந்து தொடங்கிய ஒரு சிற்பியின் பயணம், களிமண்ணில் கம்யூனிசக் தொடங்கி  கொள்கையில் முடிந்திருக்கிறது. 44 ஆயிரம் சிலை களில் ஒன்றான மார்க்ஸ் சிலை, ஆனால் அது கார்த்தி கேயனின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரே ஒரு சிலை. ஏனென்றால், அது வெறும் வெண்கலம் அல்ல - அது ஒரு போராளியின் உயிர், ஒரு தத்துவத்தின் உரு வம், உழைக்கும் மக்களின் நம்பிக்கையின் சின்னம்.

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.