தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை பேரணியுடன் துவங்கியது

6 Dec 2025, 2:48 pm
அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை பேரணியுடன் துவங்கியது
<p><strong>அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை பேரணியுடன் துவங்கியது</strong></p> <p>மதுரை, டிச. 6- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 16-ஆவது மாநில &nbsp;பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமை மதுரையில் பேரணியுடன் துவங்கியது. &nbsp;கருப்பாயூரணி நான்கு வழிச்சாலை யிலிருந்து பாண்டி கோவில் வரை பேரணி நடைபெற்து. &nbsp;அதன் விளைவாக, துவாரகா பேலஸ் மஹாலில், மாநிலத் தலைவர் ச. &nbsp;பாலகிருஷ்ணன் தலைமையில் &nbsp;பேரவை &nbsp;துவங்கியது. மாநிலச் செயலாளர் கா. சந்திர போஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியையும், வரவேற்புக்குழுத் தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளருமான இரா. &nbsp;தமிழ், அகில இந்திய அரசு ஊழியர் &nbsp;சம்மேளன கொடியையும், மாநில &nbsp;பொதுச் செயலாளர் ரா. நவநீத கிருஷ்ணன் கூட்டுறவுத்துறை ஊழியர் &nbsp;சங்க கொடியையும் ஏற்றிவைத்தனர். தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் கு. வெங்கடேசன் பேரவையைத் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார், சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் எம். சௌந்தரராஜன் வாழ்த்திப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் ரா. &nbsp;நவநீதகிருஷ்ணன், மாநிலப் பொரு ளாளர் பி. விஜயன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். ஞாயிற்றுக்கிழமையன்றும் பிரதி நிதித்துவப் பேரவை நடைபெறுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.