குறவன் இனத்தை பழங்குடிப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
30 Dec 2025, 4:07 pm
<p><strong>குறவன் இனத்தை பழங்குடிப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்</strong></p>
<p>பெ.சண்முகம் வலியுறுத்தல் சென்னை, டிச.30 - குறவன் இனத்தைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு கேட்டுள்ள கூடுதல் விவ ரங்களை மாநில அரசு விரைந்து அனுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார். தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாயன்று (டிச.30) நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் இதனைத் தெரி வித்தார். ஒன்றிய அரசின் காலதாமதமும் தனி ஆணையமும் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், “குறவன் இனத்தின் 26 பிரிவுகளும் பழங்குடி யினரே என்று ஆராய்ச்சி மைய அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. கலைஞர், ஜெயலலிதா போன்ற முன்னாள் முதல்வர்கள் பரிந்துரை செய்தும், ஒன்றிய அரசு 20 ஆண்டுகளாக விளக்கங்களைக் கேட்டு காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. இந்தியப் பதிவாளர் துறை பல்வேறு பணிகளைக் கவனிப்பதால் இக்கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. எனவே, பழங்குடி அல்லது பட்டியல் சாதி யில் சேர்த்தல் பணிகளைக் கண்காணிக்க அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு தனி ஆணை யத்தை உருவாக்க வேண்டும்” என்றார். மாநில அரசின் கடமையும் சமூகப் பாதுகாப்பும் மாநில அரசு பழங்குடி ஆராய்ச்சி மையத்துடன் விரைந்து பேசி, ஒன்றிய அரசின் சந்தேகங்களுக் குப் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இச்சமூகத் தினர் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், குறவர் இனத்தவர் மீது ‘குற்றப்பரம்பரை யினர்’ என்ற நோக்கில் பொய் வழக்குப் போடு வதைக் காவல்துறை கைவிட வேண்டும் என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திருத்தணி ரயில் தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.வி. சண்முகம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் வி.கே. தணிகா சலம் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ பி. டில்லிபாபு நிறைவுரையாற்றினார். பின்னர், முக்கிய நிர்வாகிகள் தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளர் நா. முருகானந் தத்தைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.</p>
