தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு காத்திருக்கும் பழனி தொகுதியின் வெற்றிப் படிக்கட்டுகள்!

2 Apr 2026, 3:50 pm
சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு காத்திருக்கும் பழனி தொகுதியின் வெற்றிப் படிக்கட்டுகள்!
<p><strong>சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு காத்திருக்கும் பழனி தொகுதியின் வெற்றிப் படிக்கட்டுகள்!</strong></p> <p>திண்டுக்கல் மாவட் டம் என்றாலே அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத கோட்டை என்பது வர லாறு. திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் ஆகிய தொகு திகளில் சிபிஎம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் குரலை சட்ட மன்றத்தில் ஓங்கி ஒலித் துள்ளனர். திண்டுக்கல்லில் தோழர்கள் ஏ.பால சுப்ரமணியன், எஸ்.ஏ.தங்க ராஜன், என்.வரதராஜன், கே. பாலபாரதி ஆகியோரும், வேடசந்தூரில் என்.வரத ராஜனும் மக்கள் பிரதி நிதிகளாகப் பணியாற்றி யுள்ளனர். பழனி தொகுதியும் &nbsp;இடதுசாரி வரலாறும் பழனி தொகுதியைப் பொறுத்தவரை, 1977-இல் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் என்.பழனி வேல் முதன்முதலாகச் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அத னைத் தொடர்ந்து 1980 மற்றும் 1989 ஆகிய ஆண்டு களிலும் வெற்றி பெற்று, &nbsp;மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இப்பகுதி மக்களின் பிரச்சனைகளுக் காகச் சட்டமன்றத்தில் அய ராது குரல் கொடுத்தார். தற் போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள் ளது. இந்த முறை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் என்.பாண்டி வேட்பாள ராகக் களம் காண்கிறார். விவசாயிகளின் தளபதி என்.பாண்டி தோழர் என்.பாண்டி பழனி பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலப் பொருளாள ராகவும், கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராகவும் இருந்து ஏராளமான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தி யவர். குறிப்பாக, பழனி பகுதி யில் நிலவிய ஜமீன்தாரி முறைக்கு எதிரான போராட்டங்களில் இவரது பங்கு மகத்தானது. 1948 ஜமீன்தாரி ஒழிப்புச் &nbsp;சட்டம் மற்றும் 1961 நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக, நெய்க் காரபட்டி ஜமீனுக்குச் சொந்த மான நிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற போராட்டம் எழுச்சி பெற்றது. தோழர்கள் ஆர். ராமராஜ், வி.ஏ.கருப்புசாமி ஆகியோரின் வழிகாட்டலில் தொடங்கிய இந்தப் போராட்டத்தை, என்.பாண்டி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராக இருந்தபோது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார். நில மீட்புப் போராட்டங்கள் தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் மூத்த தலைவர்களுடன் இணைந்து பெரியம்மா பட்டி, ஆண்டிப்பட்டி பகுதி களில் நில மீட்சிப் போராட்டங் களை என்.பாண்டி முன் னெடுத்தார். &nbsp;இதன் விளைவாக நூற்றுக்கணக்கான விவ சாயத் தொழிலாளர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த நிலங்களுக்கு முறை யான &lsquo;எப்-பட்டா&rsquo; (F-Patta) கோரி இன்றும் சிபிஎம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், திண்டுக்கல் பகுதியில் தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்காகக் கோட்டா ட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி, அவர் களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தந்ததில் என்.பாண்டியின் உழைப்பு முதன்மையானது. வெற்றிப் பாதை ஏற்கெனவே திண்டுக் &nbsp;கல் சட்டமன்ற மற்றும் நாடா ளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுப் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்ற வர் என்.பாண்டி. தற்போது பழனி தொகுதி விவசாயி களின் உரிமைக் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க அவர் களம் புகுந்துள்ளார். நிலப் போராட்டம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழிலா ளர் நலம் எனப் பல தளங் களில் பழனி மண்ணோடு பின்னிப் பிணைந்துள்ள தோழர் என்.பாண்டியை, மக்கள் அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. -இலமு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.