முந்தய பக்கம்

தமிழின் சிறப்பு! - தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

6 Dec 2025, 1:30 pm
தமிழின் சிறப்பு! -   தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்
<p><strong>தமிழின் சிறப்பு! - &nbsp; தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்</strong></p> <p>கண்ணே கனியே கண்மணிச் சுடரே &nbsp;கருத்தாய் நாளும் படிப்பாய்!-இரவில் விண்ணில் தோன்றும் வெண்ணில வாக &nbsp; வெளிச்சம் தன்னைக் கொடுப்பாய்! &nbsp;பொன்னே! மணியே! பூவின் இதழே! &nbsp; புன்னகை சிந்திடு நீயும் - நம் அன்னைத் தமிழில் அழகாய்ப் பேச &nbsp; அன்பாய் அணைப்பாள் தாயும்! &nbsp;திருக்குறள் கற்றுத் தெளிவுடன் விளங்கத் &nbsp;தீமைகள் எல்லாம் ஒழியும்!-வாழ்வில் பெருமைகள் சேரும் பேரும் கிட்டும் &nbsp; பெற்றோர் மனமும் மகிழும்! &nbsp;பாரதி, பாரதி தாசன் பாட்டைப் &nbsp;படித்தே பாங்காய்ப் பாடு!-நெஞ்சில் ஈரம் துளிர்க்கும் எழுச்சி பிறக்கும் &nbsp; ஈடிலா நம்தமிழ் நாடு! &nbsp;பலவாம் மொழிக்கும் பைந்தமிழ்த் தாயாம் &nbsp;படித்தே அறிவாய்ப் பிறப்பை! - இந்த உலகில் தமிழ்போல் ஒருமொழி இல்லை &nbsp; உணர்வாய்த் தமிழின் சிறப்பை!</p>
Share
FacebookXWhatsAppTelegram