குளத்தின் கரை குப்பைக்கிடங்காக மாறிய அவலம்!
28 Dec 2025, 5:05 pm
<p><strong>குளத்தின் கரை குப்பைக்கிடங்காக மாறிய அவலம்!</strong></p>
<p>உடுமலை, டிச.28- போடிபட்டி ஊராட்சியிலுள்ள குளத்தின் கரை, தற் போது குப்பைக்கிடங்காக மாறி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உடுமலை அருகே உள்ள போடிபட்டி ஊராட்சி, அண்ணாநகர் பகுதியில் திருமூர்த்தி அணையிலிருந்து வரும் தண்ணீர் சுமார் 404 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய குளத்தில் நிரப்பப்பட்டு, விவசாயப் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. இப்பகுதியில் அதிக நீர் கொள்ள ளவு கொண்ட குளம் என்ற சிறப்பு கொண்ட இக்குளத் தின் தண்ணீர் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, குளத் தைச்சுற்றி பல கிலோ மீட்டர் தூரம் நிலத்தடி நீர் மட்டம் உயர பயன்படுகிறது. மேலும், குளத்தில் மீன் வளர்ப்பு மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஏற்படுகி றது. இங்கு வளர்க்கும் மீன்களை மக்களுக்கு நேரடி யாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விளை நிலம் இல்லாத மக்கள் தங்களின் ஆடு, மாடுகளை குளப்பகுதியில் மேச்சல் நிலமாக பயன்படுத்தி வரு கின்றனர். விவசாய தேவைகளுக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த குளத்தின் கரைகளில் பல்வேறு பகுதி களில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகளை கொட் டப்படுகிறது. பின்னர் இரவு நேரங்களில் தீ வைப்பதால் பெரிய அளவில் மாசு ஏற்படுகிறது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்குளத்தின் கரை, தற் போது குப்பைக்கிடங்காக மாறி வருகிறது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>
