வளைகுடா நாடுகளின் பாதுகாப்புப் பிம்பம் தகர்வு
21 Mar 2026, 2:42 pm
<p><strong>வளைகுடா நாடுகளின் பாதுகாப்புப் பிம்பம் தகர்வு</strong></p>
<p>பாரசீக வளைகுடா நாடுகளின் பிரம் மாண்ட வானளாவிய கட்ட டங்கள், நிதி வலிமை ஆகி யவை அந்தப் பிராந்தி யத்தின் கொந்தளிப்பிலி ருந்து தங்களைப் பாது காக்கும் என்ற பிம்பம் ஈரான் போரினால் தகர்ந்துள்ளது. வளைகுடா நாடுகள் அடைந்துள்ள அதீத பொருளா தார வளர்ச்சி போர்ச் சூழலில் எவ்வளவு பல வீனமானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சொகுசு வாழ்க்கை மற்றும் சர்வ தேச முதலீடுகளின் மையமாகத் திகழ்ந்த இந்த நாடுகள், இப்போது போர்ப் பதற்றத் தால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை யை இழந்து வருகின்றன. சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் இதன் தாக்கம் ஏற்கெனவே தெரியத் தொடங்கியுள்ளது. வளைகுடாப் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெறும் நிதி சார்ந்த வலிமையால் மட்டும் உறுதி செய்யப்பட முடியாது என்பதை இந்தப் போர் நிரூபித்துள்ளது.</p>
