தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய நாட்டில் இரண்டாம் சூரியன்! - நவகவி

9 Nov 2025, 2:21 pm
இந்திய நாட்டில் இரண்டாம் சூரியன்! - நவகவி
<p><strong>இந்திய நாட்டில் இரண்டாம் சூரியன்!</strong></p> <p>கிழக்கில் சூரியன் முளைக்கும் எனத்தெரி யும்அனை வருக்கும் ! &nbsp; இந்திய நாட்டினில் &nbsp; இன்னொரு சூரியன் தெற்குத் திசையிலும் &nbsp;உதிக்கும் ! &nbsp;அருணா சலப்பிர தேசம் அருணனின் ஒளிப்பிர காசம் ! &nbsp; கீழ்த்திசைக் கதிர்என &nbsp; அறிந்த நண்பரே! இன்னொரு கதிர்எது கூறும்?! &nbsp;கேரளம் என்கிற நாடு தெற்குத் திசைத்தேன் கூடு! &nbsp; அங்கே முளைக்குது &nbsp; மார்க்சியச் செங்கதிர் ! வறுமை இருளேநீ ஓடு! &nbsp;அனைவருக் கும்அங்கு வீடு! அரசின் சாதனையைப் பாடு ! &nbsp; சொந்த வீடில்லா &nbsp; குயில்மட்டும் வரும்அங்கு வீடுகேட்டு விண்ணப்பத் தோடு ! &nbsp;மக்கள் சீனத்தின் ஆட்சி! வறுமையை ஒழித்த மாட்சி! &nbsp; முதலா ளியஉலகில் &nbsp; முதன்முத லாய்பார் கேரளத்தில் சீனத்தின் நீட்சி! &nbsp;நம்ப முடியலை நண்பா! கேரளத்தின் &nbsp;அகலமோர் வெண்பா &nbsp; கட்டியது போல்எனக்கு &nbsp; கவிதைக் கிறுகிறுப்பு! எதிரிதான் பார்ப்பான்இதை வம்பா (ய்) !! &nbsp;நாமநடுக் கோடுபோல் நேராய் மார்க்சியப் பாதைஇல்லை பாராய்! &nbsp; வானவில் கோடு போல் &nbsp; வளைவு நெளிவுடன் சமைக்கப் படும்அது ஜோராய் ! &nbsp;கல்லுக்குள் தேரைக்கும் சிவனார் படிஅளப்ப தாய்புளு கிடுவார்! &nbsp; மனுசர்க்குச் சோறளிக்க &nbsp; மாட்டாத சிவனே! மார்க்சியம் சோறளிக்கும் பார்பார்! &nbsp;&ldquo;பைத்தியக் காரரின் விடுதி &ldquo; விவேகா னந்தர்தந்த தகுதி! &nbsp; பசிப்பிணி மருத்துவம்! &nbsp; இன்றைய கேரளம்.... வைத்தியக் காரரின் விடுதி! &nbsp;அமெரிக் காவின்அணு குண்டு! அதைவிட மாபெரும் குண்டு! &nbsp; முதலா ளியஉலகை &nbsp; மூச்சுமுட்ட வைக்கும் கேரளம் எனும்பூச் செண்டு ! &nbsp;புளிஏப்ப ஒன்றிய அரசே! பசிஏப்ப மாஎமக்குப் பரிசே ? &nbsp; மாநிலம் எனும்மிட்டாய் &nbsp; சப்பிச்சப்பிச் சாப்பிட்டாய்! கேள்கேள் கேரளப்போர் முரசே! &nbsp;இந்துத்துவா எவரையும் வெறுக்கும் ! எங்கள்கேர ளத்தைக்கண்டு திகைக்கும் ! &nbsp; விருந்தாளி போலவட &nbsp; தொழிலாளி யின்வரவை வரவேற்கும் கேரளமே வணக்கம்! &nbsp;இறுதி அல்ல!இது தொடக்கம்! எழுதுபார் கேரள முழக்கம் ! &nbsp; இமயத்தில் எதிரொலி &nbsp; &nbsp;கேள்தம்பி! கேரளம் இந்தியாவின் கலங்கரை விளக்கம்!</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.