விளையாட்டு
11 Feb 2026, 5:52 pm
<p><strong>“ரப்பர் மட்டை” குற்றச்சாட்டு கிரிக்கெட் வீரர்களின் திறமைக்கு வேட்டு வைக்க சதி</strong></p>
<p>இலங்கை கிரிக்கெட் அணி யின் வீரர் பனுகா ராஜபக்சே, “இந்திய வீரர்களின் அபாரமான ‘பவர் ஹிட்டிக் (அதிரடி பேட்டிங்)’ ரகசியம் அவர்களின் பேட்களில் (கிரிக்கெட் மட்டைகளில்) இருக்கலாம். அதாவது இந்திய வீரர்களிடம் இருக்கும் பேட்கள் ஒரு ரப்பர் அடுக்குகளாக இணைக்கப்பட்டுள்ளது போன்று இருக்கிறது. அதனால் தான் அவர் களால் மிக எளிதாகப் பந்துகளை சிக்ச ருக்கு விரட்ட முடிகிறது. இது போன்ற பேட்களை நாம் சந்தையில் வாங்க முடி யாது. அவை அவர்களுக்கென்றே பிர த்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் அனை வருக்கும் தெரிந்த ரகசியம் தான்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி னார். இந்த குற்றச்சாட்டுக்கு கிரிக்கெட் உலகில் கடும் கண்டனம் கிளம்பியுள்ளன. தொடர்ச்சியானது பனுகா ராஜபக்சேவின் கருத்து கிரிக்கெட் உலகில் புதியதல்ல. இதற்கு முன் 2003ஆம் ஆண்டு உல கக்கோப்பை (ஒருநாள்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக விளையாடி 121 பந்துகளில் 140 ரன்கள் (அப் போதைய காலகட்டத்தில் இது மாபெரும் அதிரடி ஆட்டம் தான்) குவித்தார். இந்திய அணி கோப்பை யை வெல்லாததற்கு பாண்டிங்கின் அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணம் ஆகும். இந்த தோல்வி காரண மாக இந்திய ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட பலரும் பாண்டி ங்கின் கிரிக்கெட் மட்டையில் “ஸ்பிரிங் (உந்தி தள்ளுதல்)” போன்ற அமைப்பு இருந்ததாக குற்றம்சாட்டினர். ஆனால் ரிக்கி பாண்டிங்கும், ஆஸ்தி ரேலியாவும் இதனை கண்டு கொள்ளவில்லை. மேலும் இதே போன்று பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தனி நபர் குற்றச்சாட்டா கவே இருந்தது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த இந்திய வீரர்களையும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமையை சீர்குலைக்க... கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் அதிரடியாக விளையாடு வதற்கு இரண்டு சுவாரஸ்யம் உள்ளன. ஒன்று வீரர்களின் தைரியம். மற்றொ ன்று வீரர்களின் பலம் வாய்ந்த ஜிம் உடற்பயிற்சி (கைக்கு தனியாக ஆர்ம்ஸ் வகைகள்) இரண்டும் தான். இந்த சிறப்பு அம்சங்களை வளர்த்தும், கடினமான பயிற்சி மேற்கொண்டும், பந்துவீச்சுகளை கடினமான கணிப்புகளுடன் எதிர்கொண்டும் கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஆனால் ரப்பர் மட்டை, ஸ்பிரிங் மட்டை என்ற குற்றச்சாட்டுகள் வீரர்களின் திறமைக்கும், திறனுக்கும் வேட்டு வைக்கும் திட்டமாக அமையும். பார்ம் பிரச்சனையை ஏற்படுத்தும் ஒரு கிரிக்கெட் அணியில் 11 வீரர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் 3 பேர் மட்டுமே அதிரடியாக விளையாடுவார்கள். அதில் ஒரு வீரர் மட்டுமே பயம் இல்லாமல் பேட்டிங்கில் கலக்குவார். இதுதான் கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை நிலைமை. தற்போதைய சூழலில் இந்திய அணியில் “அந்த பையனுக்கு பயம் இல்லப்பா” என்று கூறும் அளவிற்கு தொடக்க ஆட்டக்காரர் (டி-20 மட்டும்) அபிஷேக் சர்மா மட்டுமே அதிரடியில் வெளுத்து வாங்கி வருகிறார். இவரது அதிரடிக்கு அவரது கடின பயிற்சி மற்றும் திறன் போன்ற கார ணங்கள் ஒருபக்கம் என்றால், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் கூடுதல் பயிற்சி மற்றும் ஆலோச னைகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் ரப்பர் மட்டை என்ற ஆதாரம் இல்லாத பொறாமை அல்லது இயலாமை குற்றச்சாட்டுகள் அபிஷேக் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்களின் சூப்பர் பார்மை இழக்கும் சூழலை கூட உருவாக்கலாம். ரப்பர் பேட் என்று ஒன்று இருக்கிறதா? தொழில்நுட்ப ரீதியாக, கிரிக்கெட் பேட்டிற்குள் ரப்பர் பகுதியை வைத்துத் தயாரிக்க முடியும். ஆனால் அது அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டி களில் சட்டவிரோதமானது. பேட்டின் மரப்பகுதிக்கு நடுவில் (Sweet Spot) ஒரு மெல்லிய ரப்பர் அடுக்கைச் செரு கினால், பந்து பேட்டில் படும்போது அது ஒரு ‘ஸ்பிரிங்’ போலச் செயல்பட்டு, பந்தை அதிக வேகத்துடன் எதிர்த்தி சையில் தள்ளும். வீரர் குறைந்த விசை கொடுத்தாலே பந்து நீண்ட தூரம் செல்லும். இதனால் தான் ரப்பர் பேட் என்று சொல்கிறார்கள். கிரிக்கெட் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு சர்வதேச வீரரும் பேட்டிற்குள் ரப்பரோ அல்லது ஸ்பிரிங்கோ வைத்து விளையாடியதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -எம்.சதீஸ் குமார்</p>
