கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
27 Jan 2026, 3:28 pm

திரையிசை பாடல்களின் வேர்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ளன: கோ.ப.நல்லசிவம்

திருப்பூர், ஜன.27 – 22ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மூன்றாம் நாளான திங்கள்று மாலை திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியப் பரிசளிப்பு விழா அதன் தலைவர் ஆ.முருகநா தன் தலைமையில் நடைபெற்றது. இதில் “தமிழிசை அன்றும், இன்றும்” எனும் தலைப்பில் கோ.ப.நல்லசிவம் இசையும், உரையுமாக கருத்துரை ஆற்றினார். அப்போது அவர் கூறிய தாவது: மனதையும், உடலையும் பண்படுத்துவது பண்பாடு. ஓசை ஒலியாகி, ஒலி இசையாகி, இசை பண்ணாகிறது. பண்ணிசை பாடும்பொழுது மனதை ஒழுங்குபடுத்துகிறது. இயல், இசை, நாடகம் என்பதில் இசை இரண்டாவதாக இருப்பதாக நினைக் கக்கூடாது. இயலுக்கும், நாடகத்துக்கும் நடுவில் இசை இருக் கிறது. ஆனால் இன்று இசைத் தமிழ், நாடகத் தமிழ் இரண்டை யும் தொலைத்து வருகிறோம். தாய் மொழி கண்கள் போன்றது. பிற மொழிகள் கைவி ளக்கு போன்றவை. கண்கள் இல்லாவிட்டால் கை விளக்கால் பயனில்லை. தங்கள் பெயருக்கு முன்பாக ஆங்கிலத்தில் முன்னெழுத்து போடும் பழக்கம் வெட்கப்படத்தக்கது. வேறெந்த மொழியிலும் இதைக் காண முடியாது. எந்த மொழியில் பெயர் எழுதுகிறோமோ அந்த மொழியில் முன்னெ ழுத்துப் போட வேண்டும். தற்போது திரையிசை பாடல்களில் வரும் ராகங்களின் வேர்கள் நம் பண்டைய இலக்கியங்களில் இருக்கின்றன. தேவாரம், திருவாசகம், குற்றாலக் குறவஞ்சி என அதில் இருக் கும் வேர்கள் தெரியாததால் தற்போது விழுதுகளைப் பார்த்து பிரமிக்கிறோம். இனிப்பு என்பது ஒரு சுவை. நேரடி யாக இனிப்பு என்பதை சுவைக்க முடியாது. லட்டு போன்ற ஒரு பொருளால் தான் இனிப்பை சுவைக்க முடியும். அது போல தமிழ் கலந்த இசை இனிக்கும். தொழிலோடு சேர்ந்துதான் பாடல் இருந்தது. உழைப்பின் களைப்பு, வலி தெரியாமல் இருக்க பாட்டிசைத்தனர். அப்படி உருவான நாட்டுப்புற, மண்ணிசைப் பாடல்களில் இருந்து தான் பண்ணிசை உருவானது. அதில் இருந்துதான் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, அரபி இசை என உரு மாறியது. அதேபோல் கூத்து மரபின் நீட்சிதான் பரதநாட்டியம். தமிழில் உள்ள ஒரு எழுத்து ஒரு சொல்லில் இடம் பெறும் போது அதன் ஓசை, உச்சரிப்பை இழக்காது. இன்றைக்கு தமிழ் இசையை அதன் வேர்களை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு கோ.ப.நல்லசிவம் கூறினார். முன்னதாக கிட்ஸ் கிளப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வின் முடிவில் தமிழ்ச்சங்கப் பொருளாளர் கே.முருகேசன் நன்றி கூறினார்.

மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: வனத்திற்குள் விரட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை, ஜன.27 - விளைநிலங்களில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை விளைநிலத்திற் குள் வராமல் தடுக்கும் வகையில், மலை அடிவாரப் பகுதியில் சூரிய சக்தி மின் வேலி அமைக்கக் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் செவ்வாயன்று உடுமலை வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். உடுமலை, அமராவதி மற்றும் கொழுமம் வன சரகத்தில் காட்டு விலங் குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானை, காட்டுப் பன்றி, மயில் மற்றும் குரங்குகளால் விளைநிலங்களில் இருக்கும் பயிர் களை சேதம் அடைந்து வந்த நிலையில், தற்போது விவசாயிகளையும் தாக்கத் தொடங்கியுள்ளன. வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப் பட்ட விளைபயிர்களுக்கும் மற்றும் வன விலங்கு தாக்குதலுக்குள்ளான விவசா யிகளுக்கும் நிவாரணம் உரிய நேரத் தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உடுமலை தாலுகா ஜல்லி பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொங்கு ரார் குட்டைப்பகுதியில் 15க்கும் மேற் பட்ட காட்டு யானைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கூட்டமாக சுற்றி திரிகிறது. இந்த யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கடந்த சில நாட்களாக வனத்துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் இருந்த தென்னை மற்றும் மா மரங்களை காட்டு யானைகள் கடுமையாக சேதப்படுத்தி உள்ளன. மேலும் விளைநிலத்தின் கம்பி வேலி கள் மற்றும் நீர் பாசன குழாய்களை உடைத்துள்ளன. இதனால் விளைநி லங்களுக்கு விவசாயிகள் செல்ல முடி யாத நிலையில் உள்ளனர். எனவே கூட்ட மாக ஒரே பகுதியில் இருக்கும் காட்டு யானைகளை உடனடியாக வனப்பகு திக்குள் விரட்ட வேண்டும். பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் எதிர்கா லங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்கு வராமல் தடுக்கும் வகை யில் மலை அடிவாரப் பகுதியில் சூரிய சக்தி மின் வேலி மற்றும் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் உடுமலை ஒன்றியத் தலைவர் பால தண்டபாணி தலைமையில் ஒன்றியச் செயலாளர் அருண்பிரகாஷ், பொருளா ளர் ராஜகோபால் மற்றும் விவசாயிகள் உடுமலை வன அலுவலரிடம் செவ்வா யன்று மனு அளித்துள்ளனர்.

பிப்.12 வேலைநிறுத்தம்: பஞ்சாலை தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு

உடுமலை, ஜன.27- பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தம், மறியலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முழுமையாக பங் கேற்பது என சிஐடியு தமிழ்நாடு பஞ்சாலைத்தொழிலாளர் சம் மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது. சிஐடியு தமிழ்நாடு பஞ்சாலைத்தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் உடுமலை வி.பி. சிந்தன் நினைவகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சந்திரன் தலைமை வகித்தார். மக்களுக்கு விரோ தமான தொழிலாளர் சட்டங்களை அமலாக்கும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தம், மறியலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முழுமை யாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.அசோகன், பொருளாளர் சக்திவேல், திருப்பூர் மாவட்டத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, பொருளாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காலமானார்

சேலம், ஜன.27- சேலம் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தா தேவியின் தாயார் சுலோச்சனா உடல் நலக்குறைவால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அத னைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

சரக்கு லாரியை மறித்த யானை

ஈரோடு, ஜன.27- சத்தியமங்கலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த லாரியை வழிமறித்து, உணவு தேடிய யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரிலிருந்து கேர்மாளம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. கேர்மாளம் பகுதியில் சாகுபடி செய்த, கரும்பு மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரி கள், அரேப்பாளையம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி செல்கின்றன. அப்போது வனத்திலிருந்து வெளியேறிய யானை ஒன்று, அவ்வழியாக செல்லும் லாரிகளில் இருந்து கரும்பை பிடுங்கி சாப்பிட்டு பழகிவிட்டது. இதனால் ருசி கண்ட யானை, தினந்தோறும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து கேர்மாளம் சாலையில் உலா வருகிறது. இந்நிலையில், கேர்மாளத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி திங்களன்று சரக்கு லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதனை கண்ட ஒற்றை யானை, லாரியை மறித்து, உணவு தேடியுள்ளது. ஆனால், எதுவும் இல்லாததால், மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

பொம்மிடியில் கோவை ரயில் நின்று செல்ல வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.27- கோவை விரைவு ரயில், பொம்மிடியில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையிலிருந்து கோவை செல்லும் விரைவு ரயில், நாள்தோறும் காலை 10.30 மணிக்கு பொம்மிடி ரயில் நிலையம் வழியாக செல்கிறது. பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உட்பட தருமபுரி வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தின் காடையாம்பட்டி வட்டாரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நாள்தோறும் திருப்பூர், கோவைக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள், தற்போது மொரப்பூர், சேலம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் மூலம் சென்று அங்கி ருந்து ரயில் மூலம் தங்களது பணிகளுக்கு சென்று வரு கின்றனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடியில் நின்று செல்வதன் மூலம், இந்த தொழிலாளர்கள் அனைவ ரும் எவ்வித சிரமமுமின்றி நேரடியாக திருப்பூர், கோவை ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும். எனவே, இப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு பொதுமக்கள் பயனடையும் வகை யில், சென்னை-கோவை விரைவு ரயில், பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பய ணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பனிமூட்டம்

உதகை, ஜன.27- நீலகிரி மாவட்டத்தில் நில வும் குளிர்ந்த கால நிலையை அனுபவிக்க, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநி லங்கள், வெளி நாடுகளிலி ருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். இந்நிலையில், குன்னூ ரில் மழை மற்றும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறைந்த அளவில் மழை மற்றும் கடும் பனிமூட்டம் நிலவுவதால், தேயிலை தோட்டப் பணிக ளும், சுற்றுலாப் பயணிக ளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன. பகல் நேரத் திலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், சாலைக ளில் கவனமாக வாகனங் களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பங்கேற்காத கிராமசபை

பொள்ளாச்சி, ஜன.27- புரவிபாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட் டத்தில், அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், கிராம மக்களே தீர்மானத்தை நிறைவேற்றினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையம் பகுதியில் திங்களன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, புரவிபாளையத்தில் புதிதாக கல்குவாரி அமைய உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்த கிராம மக்கள் கல்குவாரி வராமல் இருக்க தீர்மா னம் நிறைவேற்றக்கோரி ஊராட்சி செயலாளர் குமார் உள்ளிட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தீர்மானம் நிறைவேற்றாமல் பாதியிலேயே அதிகாரிகள் புறக்கணித்து சென்று விட்டனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள், அதிகாரிகள் இல் லாத கிராம சபை கூட்டத்தை நடத்தி கல்குவாரிக்கு எதி ரான தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

‘விபி ஜி ராம்ஜி’ திட்டத்தை திரும்பப்பெற தீர்மானம் அதிகாரிகள் மறுத்ததால், கிராம சபை புறக்கணிப்பு

ஈரோடு, ஜன.27- ஒன்றிய அரசின் ‘விபி ஜி ராம்ஜி’ திட் டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என கூறியதற்கு, அதிகாரிகள் மறுத்ததால், கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட் டாரத்தில் உள்ள செண்பகப்புதூர் ஊராட்சி யில் குடியரசு தினத்தையொட்டி, திங்களன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில், ஒன்றிய அரசின் ‘விபி ஜி ராம்ஜி’ திட் டத்தை உடனடியாக திரும்பப்பெற அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என 100 நாள் வேலைத்திட்ட தொழிலா ளர்கள் மனு அளித்தனர். கிராம சபைக்கூட்ட பொருளில் இதனை சேர்த்து, விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தொழி லாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு ஊராட்சி அதிகாரிகள் மறுத்ததால், பொதுமக் கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாரீஸ் வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப் போது, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி களான ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள் கொண்ட மன்ற கூட்டத்தில் மட்டுமே தீர்மா னம் நிறைவேற்ற முடியும், தனி அலுவலர் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்ற இயலாது என்றும், கோரிக் கையை மனுவாக அளித்தால் மாவட்ட ஆட் சியர் மூலம் அனுமதி பெற்று தீர்மானம் நிறை வேற்றலாம் எனவும் வட்டார வளர்ச்சி அலுவ லர் தெரிவித்தார். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அதிகாரி களிடம் மனு அளித்தனர்.

சாலையோர முட்புதர்களை அகற்றக் கோரிக்கை

உதகை, ஜன.27- கோத்தகிரி அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றி யுள்ள சாலையோர பகுதியில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் நகர்ப்புற பகுதியான மாதா கோவில் செல்லும் சாலையில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால், அப்பகுதியில் காட்டு மாடு, கரடி போன்ற வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டியுள்ளதால், பொதுமக்கள் சாலையில் பய ணிக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, கோத்தகிரி நக ராட்சி நிர்வாகம் அப்பகுதியிலுள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

ஈரோடு, ஜன.27- அம்மாபேட்டை அருகே கரும்பு ஆலைக்கு எரிபொரு ளாக பயன்படுத்த பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, குதிரைக்கல்மேடு, காடப்பநல்லூர், சித்தார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் நாட்டுச் சர்க்கரை, அச்சு வெல்லம், குண்டு வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் எரிபொருளாக கரும்பு சக்கைகள் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், கழிவுகள் எரியும்போது கிளம்பும் புகையால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு சுவாசக் கோளாறுகளுக்கு ஆளா வதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், குதிரைக்கல் மேட்டில் இயங்கி வரும் கரும்பு ஆலைக்கு ஒரு லாரியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வந்து திங்களன்று இறக்கப் பட்டதை கண்ட பொதுமக்கள், அம்மாபேட்டை காவல் நிலை யத்துக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பிளாஸ்டிக் கழிவுகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.