அயன் பட்டா தந்த நிம்மதி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>அயன் பட்டா தந்த நிம்மதி</strong></p>
<p>ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, மலையும் மலை சார்ந்த எழில் கொஞ்சும் பகுதியாக இருந்தாலும், நீண்டகாலமாக நிலவி வந்த நில உரிமைப் பிரச்சனைகள் இத்தொகுதியின் அரசியல் திசையை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன. 2021 தேர்தலில் வெறும் 1,275 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஏ.ஜி. வெங்கடாசலம் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை திமுக அரசின் அதிரடித் திட்டங்களும், சட்டமன்ற உறுப்பினரின் களப்பணியும் தொகுதியை ஆளுங்கட்சியின் அசைக்க முடி யாத கோட்டையாக மாற்றியுள்ளன. அயன் பட்டா விவகாரம் கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியின் போது சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலங்கள் ‘பூச்சிய மதிப்பு’ கொண்டவையாக மாற்றப்பட்டன. இதனால் தங்கள் நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாமல் விவசாயிகள் பெரும் துயரத்திற்குள்ளாகினர். விவ சாயிகளின் இந்த போராட்டத்தை உணர்ந்து, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலமைச்சர் இப்பகுதிக்கு நேரில் வந்தபோது, நிபந்தனை பட்டாக்களை ’அயன் பட்டாக்களாக’ மாற்றி நில உரிமை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். நில உரிமை என்பது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால், இந்த ஒரு நடவடிக்கை மட்டுமே வரும் தேர்தலில் திமுகவிற்கு பெரும் வாக்கு வங்கியை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் முயற்சியால், அந்தியூர் தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளை உள்ளடக்கி அறிவிக்கப்பட் டுள்ள தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், சூழலியல் பாதுகாப்போடு வன மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஏரி மற்றும் குளம் தூர்வாரும் பணிகள், உபரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி வசதிகள் மற்றும் கரடு முரடான மலைப்பாதைச் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் திமுக ஆட்சியில் வேகம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம் முன்பு ஆட்சியில் இருந்தபோது நிலங்களை பூச்சிய மதிப்பாக்கி விவசாயிகளை தவிக்கவிட்ட அதிமுக, இன்று பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. ”மோடியா, லேடியா?” என்று கேட்டவர்களின் இன்றைய நிலை வாக்காளர்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ஒன்றிய அரசின் மூலம் அந்தியூர் வனப்பகுதிகளில் கனிம வளம் தேடும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. ”இவர்களுக்கு வாய்ப்பளித்தால் வனமும், விவசாய நிலங்களும் என்னவாகும்?” என்ற கேள்வி எளிய மக்களிடையே எழுந் துள்ளது. வெற்றி வாய்ப்பு யாருக்கு? தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி, அந்தியூரில் 1,00,339 ஆண்கள், 1,05,371 பெண்கள் என மொத்தம் 2,05,737 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சூழலில், தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டம் மற்றும் ‘மகளிர்உரிமைத் தொகை’ ஆகியவை திமுக விற்கு பலமாக அமைந்துள்ளன. செவிலியர் கல்லூரி மற்றும் வனக்கல்லூரி போன்ற கோரிக்கைகள் இன்னும் பரிசீலனையில் இருந்தாலும், அயன் பட்டா என்ற மிகப்பெரிய சுமையை விவ சாயிகளின் தோளில் இருந்து இறக்கி வைத்த திமுக அரசின் மீது மக்களுக்கு அசைக்க முடி யாத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தியூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் உதிப்பது உறுதி என்பதே கள நிலவரமாக உள்ளது.</p>
