தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசாகப்பட்டினத்தில் சங்கமித்த செங்கடல்!

31 Dec 2025, 3:37 pm
விசாகப்பட்டினத்தில் சங்கமித்த செங்கடல்!
<p><strong>விசாகப்பட்டினத்தில் சங்கமித்த செங்கடல்!&nbsp;</strong></p> <p>விசாகப்பட்டினம், டிச. 31- &nbsp;இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற போர்க்குணமிக்க அமைப்பான இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமைப்பின் 18ஆவது அகில இந்திய மாநாடு, ஆந்திர மாநிலத்தின் எழில்மிகு கடற்கரை நகர மான விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 31 &nbsp;புதனன்று ரத்தமும் சதையுமான தியாக &nbsp;வரலாற்றின் பின்னணியில் மிக எழுச்சி யோடு தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து வந்து குவிந்துள்ள ஆயிரக்கணக் கான பிரதிநிதிகளாலும், எங்கு நோக்கினும் பட்டொளி வீசிப் பறக்கும் செம்பதாகைகளா லும் விசாகப்பட்டினம் மாநகரம் இன்று ஒரு &nbsp;மாபெரும் &lsquo;சிவப்புக் கோட்டையாக&rsquo; காட்சி யளிக்கிறது. மாநாடு நடைபெறும் வளாகம் முழு வதும் &ldquo;இன்குலாப் ஜிந்தாபாத்&rdquo;, &ldquo;சிஐடியு வாழ்க&rdquo; என்ற முழக்கங்கள் அலை அலையென எதிரொலிக்க, உழைக்கும் மக்களின் உரிமை முழக்கம் விண்ணைத் தொட்டது. &nbsp;தியாகச் சுடரும் உணர்ச்சிமிகு வீரவணக்கமும் &nbsp;இந்த மாநாட்டின் தொடக்கமே உணர்ச்சிப் பிழம்பாக அமைந்தது. சமீபத்தில் நெல்லூரில் கஞ்சா மற்றும் சமூக விரோத மாஃபியா கும்பல்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட தியாகி பெஞ்சலய்யாவின் தியா கத்தைப் போற்றும் வகையில் ஒரு நெகிழ்ச்சி யான நிகழ்வு நடைபெற்றது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கலங்கிய கண்களுடன், ஆனால் உறுதியான கரங்களுடன் ஏந்தி வந்த &lsquo;தியாகச் சுடர்&rsquo; மாநாட்டு வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்தச் சுடரை சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் பெற்றுக் கொண்டபோது, ஒட்டுமொத்த தோழர் களும் முஷ்டிகளை உயர்த்தி, தியாகி பெஞ்ச லய்யாவிற்கு வீரவணக்கம் செலுத்தினர். &nbsp;அதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி 27 வயதிலேயே வீரமரணமடைந்த பழங்குடிப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு, &nbsp;மந்தசா நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத் தின் வீரமங்கை குன்னம்மா ஆகியோரின் நினை வாக ஏந்தப்பட்ட சுடர்கள் மாநாட்டு மேடைக்கு வந்தடைந்தன. இது வெறும் மாநாடு அல்ல, இது தியாகிகளின் கனவை நனவாக்கும் வர்க்கப் போராட்டக் களம் என்பதை இந்தத் &nbsp;துவக்க நிகழ்வு ஆணித்தரமாகப் பறைசாற்றி யது. &nbsp;செங்கொடி ஏற்றமும் வரவேற்புரையும் &nbsp;மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த கம்பீரமான தியாகிகள் நினைவிடத்தில் தலை வர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா செங்கொடியை விண்ண திர ஏற்றி வைக்க, மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் வரவேற்புக் குழுத் தலைவர் சி.எச். நரசிங்க ராவ் தனது வரவேற்புரையில், விசாகப்பட்டினம் மண்ணின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றைப் பதிவு செய்தார். &nbsp;&ldquo;இந்த விசாகப்பட்டினம் உருக்காலை என் பது 32 தியாகிகளின் உயிரைக் கொடுத்துப்பெற்றது. &lsquo;விசாகா உருக்கு - ஆந்திருல ஹக்கு&rsquo; (விசாகை உருக்கு - ஆந்திரர்களின் உரிமை) என்ற முழக்கம் மீண்டும் இன்று வீதிக்கு வந்துள்ளது. இதைத் தனியார் முதலாளிகளிடம் விற்கத் துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக தொழிலாளர்களும் பொது மக்களும் கைகோர்த்து நிற்கும் இந்தப் போர்க்களத்தில், சிஐடியு-வின் அகில இந்திய மாநாடு நடைபெறுவது நமக்குப் பெரும் வலிமையைத் தருகிறது&rdquo; என்று அவர் ஆவேசமாக முழங்கினார். &nbsp;உலகளாவிய மற்றும் &nbsp;தேசியத் தலைவர்கள் &nbsp;இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க &nbsp;நிகழ்வில், உலகத் தொழிலாளர் களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் உலகத் &nbsp;தொழிற்சங்க சம்மேளனத்தின் (WFTU) பொதுச்செய லாளர் பாம்பிஸ் கிரிட்ஸிஸ் பங்கேற்றார். சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென், தலைவர் ஹேமலதா ஆகியோருடன் அகில இந்திய நிர்வாகிகள் ஏ.கே. பத்மநாபன், அ.சவுந்தரராசன், கே.என். ரவீந்திரநாத், ஸ்வதேஷ் தேவ் ராய்,ஜே.எஸ். மஜும்தார், எளமரம் கரீம், ஆர். கருமலையான், கே.என். உமேஷ், எஸ். வரலட்சுமி, ஆர். சிந்து, சுதீப் தத்தா உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலை &nbsp;வகித்தனர். &nbsp;மேலும், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளான மந்திரி ராஜசேகர் (ஐஎன்டியுசி), அமர்ஜித் கவுர் (ஏஐடியுசி), ஜேன் மெகர் (ஏஐயுடியுசி), மதுசூதன் (டியுசிசி), சோனியா ஜார்ஜ் (எஸ்இடபுள்யுஏ), கிளிப்டன் டி ரொசாரியோ (ஏஐசிசிடியு) மற்றும் &nbsp;சண்முகம் (எல்பிஎப் - வாழ்த்துச் செய்தி மூலம்) உள்ளிட்ட தலைவர்கள் &nbsp;பங்கேற்றுத் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். &nbsp;நிச்சயிக்கப்பட்ட &nbsp;புதிய போராட்டக் களம் &nbsp;காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் இருந்து வந்துள்ள சுமார் 2000-க்கும் &nbsp;மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திணிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்கவும் இந்த மாநாடு மிக முக்கிய மான தீர்மானங்களை இயற்றவுள்ளது. குறிப்பாக, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கான ஆயத்தப் பணிகளை இந்த மாநாடு முடுக்கிவிடவுள்ளது. &nbsp;ஆந்திர மண்ணின் பண்பாட்டு நிகழ்வுகளும், உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகரப் பாடல்களும் மாநாட்டுச் சூழலை தியாக உணர்வுடன் மிளிரச் செய்தன. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், தேசத்தின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான ஒரு புதிய &lsquo;மகா யுத்தத்தின்&rsquo; தொடக்கப் புள்ளியாக இம்மாநாடு அமைந்துள்ளது என்பது இன்று கூடியிருந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் முகங் களில் மின்னிய உறுதியிலிருந்து தெரிகிறது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.