உழைப்பாளர்கள் உழைப்பில் படர்ந்து ஒளிரும் செங்கொடி!
17 Feb 2026, 3:36 pm
<p><strong>உழைப்பாளர்கள் உழைப்பில் படர்ந்து ஒளிரும் செங்கொடி!</strong></p>
<p>“நான் கட்சிக்கு வந்தது யாரால்?” – இந்த ஒற்றைக் கேள்விக்கான பதில்கள், வெறும் சொற்கள் அல்ல; அவை இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்விட்ட கதையைச் சொல்லும் எழுதப்படாத சரித்தி ரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை துறைமுகப் பகுதிக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அந்த உரையாடல் நிகழ்வில், ஒவ்வொரு தோழரும் பேசப் பேச, அறை முழுவதும் நெகிழ்ச்சியும் எழுச்சியும் பரவியது. தஞ்சை மண்ணிலிருந்து சென்னைத் தெருக்களுக்கு… இப்பகுதியில் வசிக்கும் இராம நாதபுரத்தைச் சேர்ந்த ஒரு தோழர் தன் கதையைத் தொடங்கினார்: அதில் “பஞ்சம் பிழைக்கத் தஞ்சாவூர் போனோம். அங்க அம்மாவை இழந்தேன். தந்தை மறுமணம் செய்து கொண்டார். ஆதரவின்றி நண்பர் களுடன் சென்னைக்கு வந்தேன். என்.எஸ்.சி போஸ் ரோட்டு நடை பாதையில் வியாபாரம் செய்த போது போலீஸ் தொந்தரவு தாங்க முடியவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில்தான் இயக்கத்தின் தொடர்பு கிடைத்தது. அதுவே என் வாழ்வின் திருப்புமுனையாகி, என்னைக் கட்சிக்கு அழைத்து வந்தது” எனக் கூறினார். மொழி கடந்து அரவணைத்த இயக்கம் ஒரு பெண் தோழர், கணவ ரால் கைவிடப்பட்ட ரணத்தை பகிர்ந்துகொண்டார்: அதில், “ஒடிசாவிலிருந்து கணவருடன் சென்னைக்கு வந்தேன். அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திலேயே என்னை விட்டுவிட்டுப் போனவர், திரும்பவே இல்லை. இரவு 11 மணி வரை அங்கேயே தவித்தேன். ஒரு போலீஸ்காரர் தான் என்னைப் பாது காப்பு மையத்தில் சேர்த்தார். எனக்குத் தமிழ் தெரியாது. பிறகு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது, தையல் சங்கத் தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்புதான் என்னைக் கட்சிக்குக் கொண்டு வந்தது. இன்று என் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறேன். சரளமாகத் தமிழ் பேசுகிறேன். இவை அனைத்துக்கும் காரணம் இந்த இயக்கம்தான்” என்று உணர்ச்சிப் பொங்கப் பேசினார். விசிறிகளாக வந்தவர்கள்... விசுவாசிகளாக மாறிய கதை “நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்,” எனத் தொடங்கினார் ஒரு தோழர். “அவர் ஜெயிக்க வேண்டும் என்று சாமி கும்பிடு வோம். ரிக்சாவில்கூட அவர் கார் நம்பரைத்தான் எழுதி வைத்திருப் பார் என் கணவர். வறுமையால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத ஒரு நாளில், கந்து வட்டிக்காரர்கள் என் கணவ ரைத் தெருவில் வைத்து அடித்தார் கள். அன்று கம்யூனிஸ்ட் தோழர் கள்தான் வந்து அவரைக் காப்பாற்றி னார்கள். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அன்று கட்சிக்குள் வந்தவர்கள், இன்று வரை உறுதியாக நிற்கிறோம். சாகும் வரை இந்தச் செங்கொடியைத் தான் பிடிப்போம்” என்றார் உறுதி யான குரலில். கௌரவம் தந்த செங்கொடி லோடு வண்டி ஓட்டும் தொழிலாளர்களின் அனுபவமோ இன்னும் வீரியமானது. “ராத்திரி வண்டியிலேயே படுத்துக் கிடப் போம். போலீஸ் எங்களை அடித்து விரட்டும். ஆனால், எங்களுக்காகத் தோழர்கள் வந்து நின்றபோது, போலீசே பயந்தது. எங்களுக்கு ஒரு மரியாதை கிடைத்தது. ‘போண்டா, டீ’ வாங்கிக் கொடுத்து எங்களிடம் அன்பாகப் பேசுவார்கள்” என்றார் ஒரு தோழர். தீக்கதிர் மற்றொரு தோழர், “வேண்டா வெறுப்பாகத்தான் கூட்டங் களுக்குப் போனேன். ஆனால், ‘தீக்கதிர்’ படிக்கத் தொடங்கிய பிறகுதான் உலக விஷயங்கள் புரிந்தன; தைரியம் வந்தது. இன்று என்னை நம்பிப் பலரை இயக்கத் திற்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று முஷ்டி உயர்த்தினார். எதிர்காலத்திற்கான உறுதிமொழி பேசப் பேசக் கண்கள் கசிந்தன. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை இயக்க நிதியாக மகிழ்ச்சியுடன் கவரில் இட்டனர். காலை சிற்று ண்டியை ஒன்றாக உண்டு முடித்த தோழர்களிடம் இப்போது புதிய வேகம். “தோழர், அந்த ஏரியாவில் கட்டுமான சங்கத்தை உருவாக்கணும்!” “இந்தத் தெருவில் வீடில்லாத வர்களுக்கு வீடுகள் பெற்றுத் தரப் போராடணும்!” “வாலிபர் சங்கம் மூலம் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ணும்!” எனத் திட்டங்கள் தீட்டப் பட்டன. தெருவில் வாழ்ந்த துய ரத்தை உணர்ந்தவர்கள் என்பதால், “இனி ஒருவரும் வீடின்றித் தெரு வில் இருக்கக் கூடாது, சென்னைக்குள்ளேயே அவர் களுக்கு வீடு கிடைக்க மக்களைத் திரட்ட வேண்டும்” என்ற உறுதி பிறந்தது. அடுக்குமாடிக் கட்டிடங்களைத் தாண்டி கடல் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. தோழர்களின் சிரிப்பொலியும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை யும் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருக்க, அலுவலகக் கொடிக்கம்பத்தில் செங்கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டி ருந்தது.</p>
