தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்த வேண்டும்!

8 Jan 2026, 2:44 pm
கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்த வேண்டும்!
<p><strong>கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்த வேண்டும்!</strong></p> <p>பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் சென்னை, ஜன. 8 - பால் கொள்முதல் விலை மற்றும் ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் &nbsp;சார்பில், தமிழகம் முழுவதும் வியா ழனன்று 60 மையங்களில் கவன ஈர்ப்பு &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள ஊக்கத் தொகை மற்றும் பால் பாக்கிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு போனஸ் வழங்க வேண்டும்; கால்நடைகளுக்கு 50 சத விகித மானிய விலையில் தரமான தீவ னம் வழங்க வேண்டும்; ஆரம்ப சங்கப் &nbsp;பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய சிறப்பு ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; அரசுப் பள்ளி குழந்தைகளின் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க &nbsp;வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளையும் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடரா ஜன், பார்ல உற்பத்தியாளர் சங்க &nbsp;மாநிலத் துணைத்தலைவர் எம். &nbsp;சிவாஜி திருப்பத்தூரிலும், பால் உற்பத் தியாளர் சங்க மாநிலத் தலைவர் வெண்மணி சந்திரன் மதுரையிலும், மாநிலப் பொதுச்செயலாளர் பெருமாள், &nbsp;மாநிலத் துணைத்தலைவர் எம். &nbsp;அண்ணாமலை ஆகியோர் கிருஷ்ண கிரி ஊத்தங்கரையிலும், மாநிலப் பொருளாளர் ரவி, மாநில உதவிச் செய லாளர் சி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் &nbsp;ராணிப்பேட்டையிலும், மாநிலத் துணைத்தலைவர் கே. முகமது அலி &nbsp;பெரம்பலூரிலும் கலந்து கொண்டனர். மாநிலத் துணைத் தலைவர்கள் ஏ.எம். முனுசாமி திருப்பூரிலும், என். &nbsp;செல்லதுரை அரியலூரிலும், பி. ராம நாதன் திருச்சியிலும், ஜி. ராமசுப்பு &nbsp;தூத்துக்குடியிலும், என். ஜோதி நாமக் கல்லிலும், எஸ். கமலக்கண்ணன் பழனி யிலும், ஆர். ராஜேந்திரன் சேலத்திலும் &nbsp;பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.