முந்தய பக்கம்

தார் பார்க்காத சரலை கல் சாலை: பொதுமக்கள் அவதி!

22 Dec 2025, 4:47 am
தார் பார்க்காத சரலை கல் சாலை: பொதுமக்கள் அவதி!
<p>கள்ளக்குறிச்சி, டிச.22- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் இருந்து எஸ்.வி.பாளையம் ஊராங்கனி செல்லும் சாலை முற்றிலும் பெயர்ந்து சாலை இருந்த இடம் தெரியாத அளவிற்கு &nbsp;குண்டும் குழியுமாக &nbsp;முற்றிலும் சேதம் அடைந்து காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்,பள்ளி வாகனங்கள், பொதுமக்கள் என பயன்படுத்தும் நிலையில், விபத்தை ஏற்படுத்துவதோடு,போக்குவரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சாலையின் வழியாக செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே சாலை அமைக்காமல் சரலை கல்லாக காட்சியளிக்கும் இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே பார்வை யிட்டு புதிய தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram