ஆண்டார்மடம் செல்லும் தரைப்பாலம் துண்டிப்பால் பொது மக்கள் அவதி
4 Dec 2025, 3:52 pm
<p><strong>ஆண்டார்மடம் செல்லும் தரைப்பாலம் துண்டிப்பால் பொது மக்கள் அவதி</strong></p>
<p>திருவள்ளூர், டிச. 4- ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணியாற்றில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில்ஆரணியாற்றின் கடைநிலை பகுதியான ஆண்டார்மடம் பகுதியில் உள்ள தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு அடித்து செல்லப்பட்டது. பிச்சாட்டூர் அணையில் இருந்து 132 கி.மீ. பயணித்து பழவேற்காடு கடலில் கலக்கிறது. ஆரணியாற்றின் 126 வது கிலோமீட்டரில் உள்ள ஆண்டார்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கால் அடிக்கடி தரைப்பாலம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் ஆண்டார்மடம் கிராம மக்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர். சுமார் 20 கி.மீ தூரத்திற்கு மேல் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டார்மடம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஆட்சியாளர்கள் உடனே நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
