மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்</strong></p>
<p>விருதுநகர், டிச.23 - கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இரண்டாவது முறையாக மனு அளித்தும் பல பெண் களுக்கு இன்னும் தொகை கிடைக்க வில்லை. இதனால் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களை நாடி பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்க ளுடன் ஸ்டாலின்” திட்டம் கடந்த 2025 ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்பட்டது. நகர்ப்புறங்க ளில் 13 துறைகளின் கீழ் 43 சேவை களும், கிராமப்புறங்களில் 15 துறை களின் கீழ் 46 சேவைகளும் வழங்கப் படும் என அரசு அறிவித்தது. சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் திருத்தம், ரேசன் அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்லா மல், குடியிருப்புகளுக்கு அருகிலேயே மனுக்கள் அளிக்க வசதி செய்யப்பட் டது. இதனால் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். முகாம்களில் பல்வேறு துறைகளின் கீழ் மனுக்கள் பெறப்பட்டாலும், பட்டா மற்றும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மனுக்களில் பெரும்பா லானோருக்கு இதுவரை தீர்வு கிடைக்க வில்லை என புகார்கள் எழுந்துள்ளன. மகளிர் உரிமைத் தொகைக்காக சுமார் 30 லட்சம் பெண்கள் மனு அளித்த நிலையில், அதில் 16,94,339 தகுதி யான பெண்களுக்கு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி ரூ.1000 வழங்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், மனு அளித்தும் தொகை கிடைக்காத பெண்களுக்கு, எந்த கார ணத்தால் மனு நிராகரிக்கப்பட்டது, என்ன குறைபாடுகள் இருந்தன என்ப தற்கான தெளிவான தகவல் வழங்கப் படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணு கும்போது, கோட்டாட்சியர் அலுவல கத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படு கின்றனர். அதன்படி சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள கோட்டாட்சியர் அலு வலகங்களுக்கு மேல்முறையீட்டு மனுக் களுடன் சென்றால், “இதுகுறித்து எங்க ளுக்கு வழிகாட்டுதல் இல்லை; மனுக் களை வாங்க முடியாது” என கூறி திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக் கின்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங் கள் ஏற்படுவதுடன், பலர் கடும் மன உளைச்சலுடன் வீடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. “உரிமைத் தொகை கிடைக்காதது ஒரு பிரச்சனை என்றால், காரணம் தெரியாதது அதை விட பெரிய பிரச்சனை” என பெண்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே, விண்ணப்பித்தும் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களிட மிருந்து மீண்டும் மனுக்களை பெற்று, தகுதியான பெண்களுக்கு உரிய தொகை கிடைக்க அரசு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
