முந்தய பக்கம்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிடுக

1 Jan 2026, 4:14 pm
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிடுக
<p>சேலம், ஜன.1- குறுக்குப் பாறையூர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறிடத்திற்கு &nbsp;மாற்றிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளின் 200 ஆவது நாள் போராட்டத்தில், சங்கு ஊதி, சேவண்டி &nbsp;அடித்து, பட்டை நாமமிட்டு கலந்து கொண்டனர். &nbsp;சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சியின் குப்பைக் கழிவுகளை செட்டிப்பட்டி சந்தை அரு கில் கொட்டப்பட்டு வந்தது. கடைசி யாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் காவேரி என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது ஊரான செட்டிப்பட்டி சந்தை பகுதியில் குப்பையை கொட்டு வதால், அப்பகுதி மாசு படுகிறது என்று &nbsp;குறுக்குப் பாறையூரில் குப்பைக் கழிவு களை கொட்டிடும் பணிகளை துவங்கி னர். &nbsp;&ldquo;இச்செயல் இப்பகுதி விவசாயத் தையும் சுற்றுச் சூழலையும் அழிக்கும், ஆதலால் யாருக்கும் பாதிப்பில்லாத 19 &nbsp;இடங்கள் இருக்கிறது. அங்கு குப்பைக் கழிவைக் கொட்டிடலாம், கட்டிய புதிய கட்டடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கலாம்&rdquo; என்று பாதிக்கப்படும் குறுக்குப்பாறையூர் பொதுமக்களும், விவசாயிகளும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும் தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். &nbsp;இதன்ஒருபகுதியாக, விவசாயிகள் மாடுகளுடன், குழந்தைகளுடன் நூத னப் போராட்டத்தை அரசிராமணி பேரூ ராட்சி திடக்கழிவு மேலாண்மை புதிய கட்டடம் நுழைவாயில் முன்பு வியாழ னன்று நடைபெற்றது. தவிச கிளைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். &nbsp;தவிச மாநிலப்செயலாளர் பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி. தங்கவேலு, மாவட்ட துணைச் செயலா ளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன &nbsp;உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram