தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் அறிவித்த போராட்டம் வெற்றி!

13 Nov 2025, 3:30 pm
வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் அறிவித்த போராட்டம் வெற்றி!
<p><strong>வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் அறிவித்த போராட்டம் வெற்றி!</strong></p> <p>ஈரோடு, நவ.13- நசியனூர் அருகே பழுதடைந்த சாலை யை செப்பனிட்டு வேகத்தடை அமைக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு வட்டம், கூரபாளையம் கிராமத் திற்குட்பட்ட ஊனாத்திபுதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை யில் பெருந்துறை, சென்னிமலை, காங்கயம், &nbsp;நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை இணைக் கும் சாலை இணைகிறது. இச்சாலையை யொட்டி உள்ள ஊனாத்திபுதூர், மூலக்கரை &nbsp;ஆகிய குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட &nbsp;குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் வழியாக தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அதனால் பழு தடைந்த சாலையால் அவ்வப்போது விபத்து கள் நடந்து வருகிறது. எனவே வேகத்தடை கேட்டு பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால், பிரச்சனை தீரவில்லை. இதனி டையே, சாலைகளை சீரமைத்து, வேகத் தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் அறி விக்கப்பட்டது. இதைடுயத்து வட்டாட்சி யர், ஈரோடு, பவானி உட்கோட்ட நெடுஞ் சாலைத்துறையினர் தலையிட்டு பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்த னர். அதைத்தொடர்ந்து பழுதடைந்த சாலை &nbsp;சீரமைக்கப்பட்டது. அத்துடன் வேகத்தடை யும் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து அபாயம் &nbsp;குறித்த அச்சத்தின் பிடியிலிருந்து விலகிய அப்பகுதியினர் வேகத்தடைக்கு வெள்ளை கோடுகள் அமைத்தனர். பணிகள் முடிவ டைந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி நன்றி தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.