தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம்: போராட்டக் களத்தில் ஒரு மைல்கல்!

5 Feb 2026, 3:40 pm
உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம்: போராட்டக் களத்தில் ஒரு மைல்கல்!

உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம்: போராட்டக் களத்தில் ஒரு மைல்கல்!

கேள்வி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது? பழைய பென்சன் திட்டம் என்பதுதானே உங்கள் கோரிக்கை?

பதில்: பழைய பென்சன் திட்டத்திற்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 23 ஆண்டு காலப் போராட்டத்தில் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது அமைந்துள்ளது. இது வெறும் பொருளாதாரப் பயனுக்கான போராட்டம் மட்டுமல்ல; சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்டத்தில் இருந்து மக்கள் சேமிப்புகளை மீட்ப தற்கான, நவீன தாராளமயத்தின் தாக்குதலை எதிர்த்த எதிர் நீச்சல். கண்களுக்குக் கரை தெரியும் அளவிற்கான முதல் வெற்றி இது. முழு  வெற்றி நோக்கிய பயணத்திற்கு இந்த முன் னேற்றம் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளதே தவிர, இதுவே இறுதி இலக்கு அல்ல.

கேள்வி: ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் (UPS), தமிழ்நாடு அரசின் (TAPS) திட்டத்திற்கும் என்ன அடிப்படை வித்தியாசம்?

பதில்: ஒன்றிய அரசின் UPS திட்டம் 50% அடிப்படை பென்சன் என்று கூறுவது உண்மைதான். ஆனால் அதற்கான உத்தர வாதத்தை அத்திட்டம் தரவில்லை. அதன் விதிமுறைகளை முழுவதுமாகப் படித்துப் பார்த்தால், பத்தி 8.2-இல் அதிர்ச்சி காத்திருக் கிறது. UPS திட்டத்தின் பத்தி 8.2 சொல்வது என்னவெனில், பென்சன் தொகையும் அதன் நீடித்த பயனும் நிதி வலிமை (Fund Based Scheme) பொறுத்தே அமையும்; 50 சதவீத பென்சனுக்குக் கூடுதல் நிதி தேவைப்பட்டால் அரசு அதற்கு உத்தரவாதம் அளிக்காது. அதாவது  நிதி இல்லை என்றால் பென்சன் குறையலாம். ஆனால், தமிழ்நாடு அரசின் TAPS திட்டத்தில் “முழுமையான அரசு உத்தரவாதம்” என்று அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே மிகவும் முக்கியமான வித்தியாசம்.

கேள்வி: தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் வரவேற்கத்தக்க வேறு முக்கியமான அம்சம் என்ன?

பதில்: பணிக்கொடை (Gratuity) என்பது 20 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்ட பயன். அது இப்போது கிடைத்திருக்கிறது. ஓய்வு பெறுவோருக்குப் பணிக்கால முதிர்ச்சியைப் பொறுத்து உச்சபட்சமாக ₹25 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும். ஓய்வு பெறும்போது கைகளில் கணிசமான ஒரு தொகை கிடைக்க இது வழி செய்கிறது. இந்த ₹25 லட்சம் உச்ச வரம்பு என்பது நிலையானது அல்ல; எதிர்காலத்தில் ஒன்றிய அரசு அல்லது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமலாகும் போது  இது உயரவும் வாய்ப்புள்ளது. மேலும், முதல் அறிவிப்பில் இல்லாத ‘கம்யூட்டேசன்’ (Commu tation) வசதி எங்களின் முயற்சியால் அடுத்த அரசாணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி: TAPS ஊழியர்களின் பங்களிப்பைக் கொண்டதாக உள்ளதே! இதை எப்படி ஏற்க முடியும்?

தில்: இது பழைய ஓய்வூதிய திட்டம் அல்ல, அதுவே நமது இலக்கு என்பதில் மாற்றமில்லை. ஆனால், புதிய பென்சன் திட்டத்தில் (CPS) பங்குச் சந்தை முதலீடுகள் வீழ்ந்தால், பங்களிப்புத் தொகை திரும்ப வருவதற்கு கூட உறுதி இல்லை. அதானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்த போது அரசு ஊழியர்களின் முதலீடுகளும் பாதிக்கப்பட்ட செய்திகளைப் பார்த்தோம். தற்போது பயன் “உறுதியளிக்கப்பட்டதாக” மாற்றப்பட்டு இருப்பது ஒரு முன்னேற்றம். ஊக முதலீடுகள் மற்றும் பங்களிப்புக்கே ஆபத்து என்ற அபாயங்களிலிருந்து விடுபட்டு இருக்கிறோம். வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறு வனங்களில் கூட முதலில் பங்களிப்பு பென்சன் தான் இருந்தது; பிறகு ஊழியர்களின் நீண்ட  போராட்டத்திற்குப் பிறகுதான் அது உறுதி யளிக்கப்பட்ட பயனாக மாறியது. அதே பாதை யில் நாம் பழைய பென்சன் திட்டம் (OPS) நோக்கி முன்னேறலாம்.

கேள்வி: சிலர் 7-8% வட்டி வரும் என்று கணக்குப்போட்டு, பென்சனை விடச் சேமிப்பே சிறந்தது என்கிறார்களே? பதில்: பணி ஓய்வு பெறும்போது கிடைக்கப்போவதாகச் சிலர் கருதும் ₹50 லட்சம், ₹80 லட்சத்தின் அன்றைய உண்மை மதிப்பு என்னவாக இருக்கும்? குறைந்து கொண்டே வரும் வட்டி விகிதங்கள் இன்னும் குறையாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசோ, அரசு வங்கியோ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னால் இருக்கிற நிதிச் சூழலைக்கூடக் கணிக்க முடிவதில்லை என்பதுதான் 555 நாள் சேமிப்புத் திட்டங்களின் நிலை. மேலும், வங்கி சேமிப்புக்கு வட்டித்தொகை குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் வருமான வரி வந்துவிடும். 2025-இல் அடிப்படைப் பணவீக்கம் (Core inflation) 3.5% முதல் 4.3% வரை இருக்கும் எனில், சேமிப்பு வட்டி வீதத்தில் இருந்து இதைக் கழித்து வரும் “உண்மை வட்டி விகிதம்” மிகக் குறைவு. இப்போது வெளியே உள்ள பென்சன் சேமிப்பு திட்டங்களில் ₹1 கோடி முதலீடு செய்தால் கூட மாதம் ₹55,000 தான் கிடைக்கும். ஆனால் அரசு தரும் பென்சன் என்பது வாழ்நாள் பாதுகாப்பு.

கேள்வி: பென்சன் தொகையின் உண்மை மதிப்பும் பணவீக்கத்தால் குறையாதா? பதில்: குறையலாம். ஆனால் பென்சன் திட்டத்தில் “பஞ்சப்படி” (DA) ஈடு உள்ளது. மொத்த தொகையை டெபாசிட் செய்யும்போது அசலும்  வட்டியும் பணவீக்கத்தால் அதன் மதிப்பை இழக்கும். ஆனால் பென்சனைப் பொறுத்த வரையில், பஞ்சப்படி என்பதே பணவீக்கத்தின் அரிப்பிலிருந்து நம் பயனைப் பாதுகாக்கும் அரண். UPS திட்டத்தில் ஊழியர்கள் தங்களின் பங்களிப்பிலிருந்து ‘Final Withdrawal’ செய்தால் பென்சன் குறையும். ஆனால் TAPS-ல்  அரசு தரும் உத்தரவாதம் அத்தகையது அல்ல. கேள்வி: ஏன் பழைய பென்சன் மீட்பு இவ்வளவு தடை தாண்டும் ஓட்டமாக உள்ளது? பதில்: இந்தத் தாக்குதலின் வேர்கள் சர்வதேச  நிதி மூலதனத்தின் சூதாட்டத்திற்குள் பொதிந்துள் ளன.

1990-களில் சோவியத் யூனியன் சரிவுக்குப் பிறகு, உலகம் முழுவதும் சமூகப் பாதுகாப்பு  மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. “வரை யறுக்கப்பட்ட பென்சன் பயன்” (Defined Bene fit) திட்டங்களைத் தகர்த்து, ஊழியர்களைப் பங்குச் சந்தை மேசைக்கு இழுப்பதே தாராள மயத்தின் நோக்கம். 2025 நிதி மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள “வேலிடேஷன் கிளாஸ்”  (Validation Clause) என்பது ஊதிய மாற்றங் களின் போது பென்சன் உயருவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பு களையே நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி. இத்தகைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில்தான் நாம்  போராடிக்கொண்டிருக்கிறோம். கேள்வி: எதிர்க்கட்சிகள் மற்றும் சில விமர்சகர்கள் இதைக் குறை சொல்கிறார்களே? பதில்: தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் 2003-இல் பறிக்கப்பட்டதே அதிமுக ஆட்சியில் தான்.

போராட்டம் வெடித்தபோது அமைக்கப்பட்ட கிருஷ்ணன் ஐஏஎஸ் குழுவின் அறிக்கை என்னானது? இன்று வரை “நாங்கள் வந்தால் பழைய பென்சன் தருவோம்” எனச் சொல்ல எடப்பாடி பழனிசாமி அவர்கள் தயாராக இல்லை. அதேபோல், பாஜக ஆளும் எந்த மாநிலமும் பழைய பென்சனைக் கொண்டு வரவில்லை; மாறாக அதை அமல்படுத்த முயன்ற ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு (PFRDA) நிதியைத் தராமல் மோடி அரசு முடக்கியது. ராஜஸ்தானுக்கு மட்டும் ₹45,000 கோடி மறுக்கப்பட்டுள்ளது. விமர்சனம் செய்பவர்கள் ஊழியர்களை ஏமாற்ற முயல்கிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான தீர்வை முன்வைக்கவில்லை. கேள்வி: ஒருவேளை அரசாணையில் ஊழியர்களுக்கு ‘ஆப்ஷன்’ (விருப்பத் தேர்வு) வழங்கப்பட்டால் ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்? ​பதில்: ஊழியர்களிடம் நிலவும் புறச் சூழல் மற்றும் பிற துறைகளின் அனுபவங்களை நாங்கள் எடுத்துச் சொல்வோம். வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் இதுபோல ஆப்ஷன் வழங்கப்பட்டபோது, தொடக்கத்தில் பலர் பங்களிப்புத் தொகை கிடைத்தால் போதும் என்று பென்சனைத் தேர்வு செய்யவில்லை. ஆனால் 15 ஆண்டுகள் கழித்து அதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு மீண்டும் பென்சன் திட்டத்தில் இணைந்தார்கள். ​

விதிகளில் ஆப்ஷன் வந்துவிட்டால், ஒருவேளை மொத்தமாகப் பணத்தைப் பெற  வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அதற்கு ஏற்ப முடிவெடுக்கலாம். ஆனால் உறுதி யளிக்கப்பட்ட பென்சன் பயனை யாரோ  சொல்வதைக் கேட்டு ஊழியர்கள் குறைத்து  மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள் கிறோம். தற்போதைய சூழலில் ₹1 கோடி முதலீடு செய்தால் கூட மாதம் ₹55,000 தான் வட்டி கிடைக்கும் என்பதை உணர்ந்து, எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் விழிப்புணர்வுடன் முடிவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் அறிவுரை.

கேள்வி: எதிர்காலப் பயணம் எப்படி இருக்கும்? பதில்: இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கக் கோரிக்கைகளைத் தொடர்ந்து முன் வைப்போம். அதே நேரத்தில் பழைய பென்சன் திட்டம் என்கிற இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர்வோம். எப்போதுமே கிடைத்த முன்னேற்றத்தைப் பெற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் போராட்டங் களின் இயல்பு. ஓய்வு காலத்தில் நிம்மதியான, உத்தரவாதமான பென்சன் கிடைப்பதற்கான வாசல் திறந்திருக்கிறது. இப்போது எட்டப்பட்டுள்ள முன்னேற்றம், நீச்சல் குளத்தில் உள்ள தாங்கு பலகை போன்றது. அதைப் பயன்படுத்தி இன்னும் வேகமாக முன்னேறுவோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.