தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்லடம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தும் பிரச்சனை அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் முட்டுக்கட்டை

19 Nov 2025, 3:33 pm
பல்லடம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தும் பிரச்சனை  அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் முட்டுக்கட்டை
<p><strong>பல்லடம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தும் பிரச்சனை &nbsp;அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் முட்டுக்கட்டை</strong></p> <p>திருப்பூர், நவ.19 - &nbsp;திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் &nbsp;நிலையம் பகுதியில் ஆட்டோ நிறுத்தத் தில் புதிய உறுப்பினர்கள் சேர முயற்சிக் கும் விஷயத்தில், கடந்த இரண்டு ஆண் டுகளாக அரசு நிர்வாகம் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த தவறி வருகிறது. &nbsp;இதனால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகி றது. பல்லடம் நகரின் பஸ் நிலையம், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பல்லடம் நகரிலும், சுற்றுவட்டார விரி வாக்க பகுதிகளுக்கும் செல்வதற்கு வாடகை ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தில் உள்ளே வந்து செல்லும் மேற்கு மற்றும் &nbsp;கிழக்கு பகுதிகளில் தலா 21 ஆட்டோக் கள் என மொத்தம் 42 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக இயக் கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதி தாக 28 வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களையும் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தி இயக்குவதற்கு அனுமதி கோரி உள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக அரச நிர்வா கத்திடம் இதுகுறித்து மனு கொடுத்து வருகின்றனர். எனினும் ஆட்டோ &nbsp;நிறுத்துவது குறித்து அரசு நிர்வாகத்தின் &nbsp;மூலம் எவ்விதமான முடிவும் சொல்லா மல் அலட்சியம் செய்து வந்தனர். குறிப்பாக கொரோனா பெரும் தொற்று காலத்திற்குப் பிறகு இளைஞர் கள் பலர் வேலை வாய்ப்பு இல்லாத சூழ் நிலையில் புதிதாக கடனுக்கு ஆட்டோ &nbsp;வாங்கி வாடகைக்கு இயக்கி வாழ்க்கை &nbsp;நடத்தலாம் என முயற்சித்துள்ளனர். அவர்களின் ஒரு பகுதியினர் தான் பஸ் &nbsp;நிலையம் பகுதியில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி வந்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவல கம், பல்லடம் நகராட்சி நிர்வாகம், வரு வாய்த் துறையினர் என அரசு நிர்வாகத் தினர் இந்த விஷயத்தில் பொருத்த மான முறையில் தீர்வு காண எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. &nbsp;இந்நிலையில் கடந்த ஓரிரு வாரங்க ளுக்கு முன்பு திருப்பூர் வருவாய் கோட் டாட்சியரிடம், 28 ஆட்டோக்களை பல்ல டம் பஸ் நிலையம் பகுதியில் நிறுத்து வதற்கு மீண்டும் அனுமதி கோரினர். அப்போது கோட்டாட்சியர், ஏற்க னவே பஸ் நிலையம் பகுதியில் ஆட் டோக்களை இயக்கி வரும் 42 பேரும், &nbsp;புதிதாக இடம் கோரும் 28 பேரும் தங்க ளுக்குள் பேசி தீர்வு காணும் படி ஆலோ சனை கூறியுள்ளார். &nbsp;இதை ஏற்று புதிதாக இடம் கேட்கும் &nbsp;28 ஆட்டோ ஓட்டுனர் தரப்பினர், பல்ல டம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே &nbsp;ஆட்டோ இயக்கி வருவோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். 28 ஆட் டோக்களை அனுமதிக்காவிட்டாலும் மேற்கு கிழக்கு என இரு பகுதிகளில் கூடு தலாக தலா 10 ஆட்டோ வீதம் 20 ஆட் டோக்களை நிறுத்துவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுக ளாக பல்லடம் பஸ் நிலைய பகுதியில் &nbsp;ஆட்டோ இயக்கி வரும் தங்களுக்கு கூடு தல் ஆட்டோக்களை நிறுத்தினால் வாழ் வாதாரம் பாதிக்கும் என்று சொல்லி, புதி யவர்களுக்கு இடம் தர முடியாது என்று &nbsp;மறுத்து விட்டனர். அரசு அதிகாரிகளும் வாய்ப்பு ஏற்ப டுத்தித் தராமல், பழைய ஆட்டோ ஓட்டு நர்களும் பிடிவாதமாக மறுக்கும் நிலை யில், புதியவர்கள் கடந்த வாரம் பஸ் &nbsp;நிலையம் அருகிலேயே வலுக்கட்டாய மாக தங்கள் ஆட்டோக்களையும் நிறுத்த தொடங்கினர். &nbsp;இதையடுத்து, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதி யவர்கள் ஆட்டோவை நிறுத்திய மறு நாள், பழைய ஆட்டோ ஓட்டுநர்கள் தங் கள் குடும்பத்தாரையும் சேர்த்துக் கொண்டு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் முன் பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். புதியவர்களை அனுமதித்தால் தங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படு வோம் என்று அவர்கள் ஆத்திரத்துடன் கூறினர். காவல்துறையினர் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீண் டும் நவம்பர் 17ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று சமரசம் &nbsp;செய்தனர். எனினும் திங்கள், செவ்வாய் &nbsp;இரு நாட்களும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆட்டோ நிறுத் தும் பிரச்சனை சுமூகத் தீர்வு ஏற்படாமல் &nbsp;தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இரு தரப்பினரும் பேசி தீர்வு காண &nbsp;ஆலோசனை கூறியும், தீர்வு ஏற்படாமல் &nbsp;பிரச்சனை முற்றியதால், ஆர்.டி.ஓ, பல் லடம் பஸ் நிலையம் அருகே ஆட்டோ &nbsp;நிறுத்தத்தை ரத்து செய்து விட்டார். அங்கு தடுப்பு அரண்கள் (பேரிகார்ட்) அமைத்துள்ளனர். இப்போது பல ஆண்டுகளாக அங்கு &nbsp;இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்க்கை யும் பாதிக்கப்பட்டுள்ளது. புதியவர்க ளுக்கும் வழி பிறக்கவில்லை. இது மட்டு மின்றி, பஸ் நிலையத்தில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லடம் நகராட்சி நிர்வாகம் இந்த &nbsp;விசயத்தில் முடிவு செய்யும்படி கோட் டாட்சியர் கூறியுள்ளார். இவ்வாறு இப்பி ரச்சனையில் முட்டுக்கட்டை நிலை ஏற் பட்டுள்ளது. பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்க னவே ஆட்டோ இயக்கி வருவோர் வாழ் வாதாரம் பாதிக்கும் என அச்சப்படுவது &nbsp;நியாயம் தானே, என்று புதிதாக இடம் &nbsp;கேட்போரிடம், கேட்டதற்கு, சரி தான், &nbsp;ஆனால் பஸ் நிலையம் என்பது தனியார் &nbsp;இடம் இல்லை. பொது இடம் தானே? &nbsp;மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பல் லடம் நகரம் விரிவடைந்து, மக்கள் தொகை அதிகரித்துள்ளது. போக்கு வரத்து தேவையும் அதிகரித்துள்ளது. &nbsp;எனவே ஆண்டுக்கு தலா 2 ஆட்டோக் களுக்கு அனுமதி கொடுத்திருந்தால் கூட, 20 ஆட்டோக்களை கூடுதலாக இயக்க முடியும். &nbsp;இப்போதே பண்டிகை காலம், முகூர்த்த நாட்களில் பயணிகள் இங்கு &nbsp;ஆட்டோ கிடைக்காமல் காத்திருப்பதை &nbsp;பார்க்கலாம். எனவே இப்பிரச்சனைக்கு &nbsp;தீர்வு காண முடியும், தேவைப்பட்டால் சுழற்சி முறையில் ஷிப்ட் முறையில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று புதிய வர்கள் தங்கள் கோரிக்கையின் நியா யத்தை முன்வைக்கின்றனர். எனினும் வருவாய், போக்குவரத்து, &nbsp;நகராட்சி, காவல் துறை உள்ளிட்டோர் &nbsp;அக்கறை கொண்டு இரு தரப்பினரை யும் அமர வைத்துப் பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும். இந்த விஷயத்தை இரண்டு ஆண்டுகளாக கண்டு கொள் ளாமல், இரு தரப்பினர் முரண்பாடாக நீடிக்க வைப்பதை நியாய மனப் பான்மை கொண்ட யாரும் சரி என்று ஏற் றுக் கொள்ள மாட்டார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.