திசைமாறும் அரசியல் காற்று!
30 Mar 2026, 3:40 pm
<p><strong>திசைமாறும் அரசியல் காற்று!</strong></p>
<p>இளநீருக்கும், தென்னை சார் தொழில் களுக்கும் உலகப் புகழ்பெற்ற பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, 2026 தேர்தலில் ஒரு மிக முக்கியமான வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்கொள்கிறது. சுமார் 15,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் ஈட்டித் தரும் தென்னை நார்த் தொழில், இன்று ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், ஏற்றுமதி சரிவாலும் நலிவடைந்து வருவது இத்தொகுதியின் பிரதான தேர்தல் கருப்பொரு ளாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் மற்றும் வறட்சியால் தென்னை விவசாயிகள் தவித்து வரும் சூழலில், ஒன்றிய பாஜக அர சின் வெளியுறவுக் கொள்கைகளால் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ”கார்ப்ப ரேட்களுக்கு சலுகை வழங்கும் மோடி அரசு, சிறு குறு தொழில்முனைவோரை கைவிட்டு விட்டது” என்பது இப்பகுதி மக்களின் ஆதங்கம். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோ கம், வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிப்புபோன்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. எம்.எல்.ஏ-வின் செயல்பாடின்மை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், தொகுதியின் பிரதான கோரிக்கைகளுக்காகவோ அல்லது தென்னைத் தொழில் வளர்ச்சிக்காகவோ ஆக்கப்பூர்வமான எவ்வித அழுத்தத்தையும் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அரசோடு கூட்டணியில் இருந்தும், தென்னை சார் தொழில்களுக்குத் தேவையான மானியம் அல்லது இன்சூரன்ஸ் திட்டங்களை பெற்றுத்தர தவறியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை கிராமப்புறப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மாவட்டத் தலைமை மருத்துவ மனையை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்துதல் மற்றும் ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டத்தைச் செயல் படுத்த திமுக அரசு காட்டும் ஆர்வம் ஆகியவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பவர் யாரோ, அவரே பொள்ளாச்சியின் வெற்றியாளராக முடியும். அதிமுகவின் செயல்பாடின்மையும், ஒன்றிய அரசின் அலட்சி யமும் ஒருபுறம் இருக்க, திமுக அரசின் நேரடி நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்க ளிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இம்முறை பொள்ளாச்சி தேர்தல் முடிவு களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
