தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயத்திற்கு தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம்!

23 Feb 2026, 5:35 pm
விவசாயத்திற்கு தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம்!
<p><strong>விவசாயத்திற்கு தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம்!&nbsp;கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது?</strong></p> <p>- ஜி.லெனின் - தருமபுரி, பிப்.23- நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால், விவசாயத்திற்கு கூட தண்ணீரை &nbsp;விலைக்கு வாங்கும் அவலம் தொடரும் நிலையில், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், கம்பைநல் லூரை அடுத்த கே.ஈச்சம்பாடி பகுதி வழியாக தென்பெண்ணை ஆறு செல் கிறது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் அதிகளவு உபரி நீர் ஆற்றின் வழியாக சென்று கடலில் &nbsp;கலக்கிறது. இதனால் விவசாயிக ளுக்கு இந்த தண்ணீர் பயன்படாம லேயே இருந்து வருகிறது. இதனால் கம்பைநல்லூர், மொரப்பூர், கடத்தூர், &nbsp;அரூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவ சாயிகள், தண்ணீர் பற்றாக்குறையால் நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், தரிசாகவே விட்டுள் ளனர். மேலும், போதிய நீர் ஆதாரம் இல்லாததால், விவசாய நிலங்களை விற்பனை செய்து விட்டு ஓசூர், திருப் பூர், கோவை, சென்னை, மதுரை போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களுக்கும், அதேபோல கர்நாடகா, கேர ளம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். தென்பெண்ணை ஆறு வழியாக கடலுக்கு செல்லும் உபரிநீரை, விவ சாய பயன்பாட்டிற்கு கொண்டு வரும் &nbsp;வகையில், கே.ஈச்சம்பாடி அணைக் கட்டில் இருந்து ராட்சத பம்புகள் அமைக்கப்பட்டு, நீரேற்றும் திட்டத்தை &nbsp;செயல்படுத்தி, வறண்டு கிடக்கும் ஏரி களை நிரப்பினால் விவசாயிகள் பயன டைவார்கள். இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி விவசாயிகள் அரசை வலியுறுத்தி வரு கின்றனர். இத்திட்டத்தை கொண்டு வந் தால் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப் பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள &nbsp;சுமார் 66 ஏரிகளுக்கு நீர் ஆதாரம் கிடைக் கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், &nbsp;குடிநீர் பிரச்சனைகள் தீரும்; வேளாண்மை பணிகள் மேம்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கே. ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தின் சர்வே பணிக்காக ரூ.10 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது, ஆனால், சர்வே &nbsp;மட்டுமே செய்யப்பட்டது; வேறு எந்த வொரு பணிகளும் நடக்கவில்லை. இப் பகுதிகளிலுள்ள விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் பருவ மழையே அதிகளவில் நம்பியுள்ள நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயி கள், பயிர்களை அழியாமல் காப் பாற்ற, தண்ணீரை தினந்தோறும் விலை கொடுத்து வாங்கி அதை &nbsp;கிணற்றுக்குள் இறைத்து, அதிலி ருந்து பாசனம் செய்து பயிர்களை வளர்த்து வருகின்றனர். மேலும் நெல்லி, நெற்பயிர், கரும்பு, தென்னை, &nbsp;வாழை உள்ளிட்ட பயிர்களை விளை விக்க தினந்தோறும் காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, தொடரும் இந்த அவல &nbsp;நிலையை போக்க, நீர் ஆதாரங்களை &nbsp;அதிகரிக்கும் வகையில், கே.ஈச்சம் பாடி நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். அப்படி செயல்படுத் தினால் மட்டுமே விவசாயப் பயிர்களை யும், கால்நடைகளையும் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் வேதனை யோடு தெரிவிக்கின்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.