மோடி அன் கோவுக்கு மக்கள் வைக்கப்போகும் முற்றுப்புள்ளி
20 Mar 2026, 2:55 pm

மோடி அன் கோவுக்கு மக்கள் வைக்கப்போகும் முற்றுப்புள்ளி

அரசியல் பயணத்தில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை என்றும், இந்திய நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் திறம்படப் பணியாற்றிய தலைவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் (தினமணி 19.03.2026).

நாடாளுமன்ற மாநிலங் களவையிலிருந்து ஓய்வுபெறும் 59 உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தங்களது ஆட்சியில் இந்திய நாடாளுமன்றம் உயர்ந்த ஜன நாயகப் பண்புகளுடன் திறந்த பல் கலைக்கழகம் போல செயல்படுவ தாகவும், அங்கே கிடைக்கும் அனுபவங்கள் விலைமதிப்பில்லா தவை என்றும் தமக்குத் தாமே புகழார மும் சூட்டிக் கொண்டார். பிரதமர் மோடி இவ்வாறு புதுதில்லி யிலே முழங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் தான் நாட்டின் பல பகுதிகளில் மாநிலங்களவை உறுப் பினர்களுக்கான தேர்தல் நடை பெற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளாக, மாநி லங்களவைத் தேர்தல் என்றாலே தனது பாணியில் ஜனநாயகப் படுகொலை களை அப்பட்டமாக அரங்கேற்று வதையும், தேர்தல் நடைமுறை களையே கேலிக் கூத்தாக மாற்று வதையும் வழக்கமாக்கிக் கொண்டுள் ளது பாஜக. தனது சதிச் செயல்களை, இந்த முறையும் எவ்விதத் தயக்க முமின்றி செயல்படுத்திமுடித்துள்ளது. தனது பணபலம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு, பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், மிரட்டிப் பணியவைத்தும் அவர்களைக் கட்சிமாறி வாக்களிக்கச் செய்து மாநிலங்களவையில் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வது என்கிற கீழ்த்தரமான நடை முறையைக் கடந்த பல ஆண்டு களாகவே பாஜக பின்பற்றி வருகிறது. அவ்வாறு கட்சியின் கொறடா உத்தரவை மீறி பாஜகவுக்கு வாக்க ளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட கட்சிகள் முறையீடு செய்த போதிலும், சபாநாயகர்கள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை என்பதே கசப்பான உண்மை யாக இருந்து வருகிறது. ஏற்கெனவே குஜராத், மகாரா ஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ் தான், கர்நாடகா என்று பல மாநிங்களில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ராஜ்யசபா தேர்தல்களைச் சந்தித்த அதே அணுகுமுறையை, இந்த முறை ஹரியானாவிலும், ஒடிசாவிலும் பாஜக செயல்படுத்தியுள்ளது. பிற கட்சி எம்எல்ஏ-க்களை வளைத்துப் போடும் பாஜகவின் இத்த கைய படுமோசமான அரசியலை அம்ப லப்படுத்தி விமர்சிக்க வேண்டிய ஊட கங்கள், அதற்குப் பதிலாக, “மோடி, அமித் ஷாவின் மகத்தான வியூகம்” என்று தலைப்பிட்டு, ஜனநாயகப் படுகொலைக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றன. முந்தைய ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அரு ணாசலப் பிரதேசம் என்று பல மாநிலங்களில், தேர்தலில் தோல்வி யடைந்த போதிலும், பணப்பெட்டிகள் மூலம் ஆள்பிடி வேலையில் இறங்கி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டது தான் பாஜகவின் இழி வான வரலாறாக இருந்து வருகிறது. இப்போதும் கூட, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்தக் காலகட்டத்தில், அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களைக் குறி வைத்து மிரட்டி, பாஜகவுக்கு இழுப்பதில் தீவிர முனைப்பைக் காட்டி வருகிறார் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. அசாமில் முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்து, ஊழல் குற்றச்சாட்டு காரண மாகப் பதவியிழந்து, பின்னர் பாஜக வாஷிங் மெஷின் மூலம் விசாரணை வளையத்திலிருந்து வெளிவந்து, இப்போது அசாம் முதலமைச்சராகவே ஆகிவிட்டவர் தான் இந்த ஹிமந்த பிஸ்வ சர்மா என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது. இவ்வாறு ஒருபுறம் ஜனநாயக மாண்புகளையும், நாடாளுமன்ற மரபுகளையும் காலில் போட்டு மிதித்து புதைப்பதையே வழக்கமாகக் கொண்டு, மறுபுறம் “நாடாளுமன்றம் திறந்த பல்கலைக் கழகம்” என்றெல் லாம் பேசி நடிப்பதும், வார்த்தை விளை யாட்டில் ஈடுபடுவதும் மோடியின் வாடிக்கை. தமிழக வாக்காளர்கள் பாஜக வின் இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலையும், ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். அடிமைக் கட்சிகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு பாஜக தனது மதவெறி நிகழ்ச்சி நிரலை யும், கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங் களையும் புகுத்த முற்படுவதைத் தமிழகம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. ஆம். மோடி அன் கோவின் மோசடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிட தமிழக மக்கள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டார்கள். - க. மன்னன்

பிற கட்சி எம்எல்ஏக்களை வளைத்துப் போடும் பாஜகவின் இத்தகைய படுமோசமான அரசியலை அம்பலப்படுத்தி விமர்சிக்க வேண்டிய ஊடகங்கள், அதற்குப்பதிலாக, “மோடி, அமித் ஷாவின் மகத்தான வியூகம்” என்று தலைப்பிட்டு, ஜனநாயகப் படுகொலைக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றன.