தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வளர்ச்சியை எதிர் நோக்கும் வந்தவாசி தொகுதி மக்கள்...

27 Mar 2026, 3:15 pm
வளர்ச்சியை எதிர் நோக்கும் வந்தவாசி தொகுதி மக்கள்...
<p><strong>வளர்ச்சியை எதிர் நோக்கும் வந்தவாசி தொகுதி மக்கள்...</strong></p> <p>இந்திய வரலாற்றின் திசையை தீர்மானித்த மண் வந்தவாசி. 18-ஆம் நூற்றாண்டில் (1756-1763) நடைபெற்ற மூன்றாவது கர்நாடகப் போரில், காலனிய ஆதிக்கப் போட்டியில் பிரான்சை வீழ்த்தி பிரிட்டன் நிலைபெற காரணியாக அமைந்தது இதே வந்தவாசி கோட்டைதான். ஆனால், அன்று அந்நியப் படைகளைச் சந்தித்த இந்த மண், இன்று தொழில் முடக்கம், வேலையின்மை மற்றும் அரசின் அலட்சியம் ஆகியவற்றுடன் வாழ்வாதாரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம்: &nbsp;எண்ணிக்கையும் எதார்த்தமும் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இத்தொகுதியில் 2,11,811 வாக்கா ளர்கள் (பெண்கள் 1,07,144; ஆண்கள் 1,04,662) உள்ளனர். பெண் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் இன்னும் காகித அளவிலேயே உள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றி ருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதே நிதர்சனம். கோரிக்கைகளும் &nbsp;முடங்கியுள்ள தொழில்களும் வந்தவாசியின் பெருமை அங்குள்ள பாய் நெசவுத் தொழில். ஆனால், இன்று கார்ப்பரேட் ஆதிக்கத்தாலும், நவீன தொழில்நுட்ப மாற்றங்களாலும் இத்தொழில் நலிவடைந்து வருகிறது. &nbsp;கல்வி உரிமை &nbsp;ஏழை மாண வர்களைத் தனியார் கல்வி நிறு வனங்கள் சுரண்டுவதைத் தடுக்க, உடனடியாக அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி களை அமைக்க வேண்டும். 40 ஆண்டுகளாக ஆரம்பப் பள்ளி யாகவே இருக்கும் உருதுப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவது சிறுபான்மையின மக்களின் கல்வி உரிமையாகும். மின்சார உரிமை பாய் நெசவுத் தொழிலை விவ சாயத்திற்கு இணையாகக் கருதி இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் முடங்கிக் கிடக்கும் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களை ஜன நாயகப்படுத்தி, அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். பனைப் பொருள் வளர்ச்சி பனைத் தொழில் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை துருப்பிடித்துக் கிடப்பது, அரசு இயந்திரத்தின் மெத்தனத்தைக் காட்டுகிறது. இதை உடனடியாகத் திறப்பதன் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் வந்தவாசி பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் குடும்பங்களுக்கு பட்டா பெறவும், விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், சாதி, மத இன வேறுபாடுகளுக்கு எதிராகவும் களம் கண்டு, அதில் வெற்றிபெற்றுள்ளது செங்கொடி இயக்கம். வளர்ச்சிப் பணிகள் ஒரு மதிப்பீடு &nbsp;தற்போதைய ஆட்சிக்காலத்தில் மருத்துவமனைக் கட்டிடங்கள், சாலை மேம்பாடு மற்றும் பள்ளி உள்கட்டமைப்புகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், கீழ்க்கண்ட திட்டங்கள் இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன: சிப்காட் காஞ்சிபுரத்திற்கு அருகாமையில் இருந்தும், அறிவிக்கப்பட்ட சிப்காட் திட்டம் சர்வேயுடன் முடங்கியுள்ளது. இது இப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிறுவனங்கள் அரசு பொறியியல் மற்றும் தொழில் &nbsp;நுட்பக் கல்லூரிகள் இல்லாதது, ஏழை எளிய மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்ளைக்குத் தள்ளுகிறது. வேளாண் - நீர் மேலாண்மை மருதாடு ஏரியைச் சிற்றணையாக மாற்றக் கோரும் விவசாயிகளின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட &lsquo;விதைப் பண்ணை&rsquo; திட்டம் வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். சமூக நல்லிணக்கமும் அரசியல் மாற்றமும் வந்தவாசி சமூக நல்லிணக் கத்தின் பூமி. இங்குள்ள உருதுப் பள்ளி 40 ஆண்டுகளாக ஆரம்பப் பள்ளியாகவே நீடிப்பது சிறு பான்மையின மக்களின் கல்வி உரி மையைப் பாதிக்கும் விஷயமாகும். இதை உடனடியாக நடுநிலைப் பள்ளி யாகத் தரம் உயர்த்த வேண்டும். &ldquo;மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்காமல், மத வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் சக்திகளுக்கு (பாஜக-அதிமுக கூட்டணி) இங்கு இடமில்லை. &nbsp;வந்தவாசி தொகுதியின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்த ஒன்றிய அரசு முதன்மையான சில திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, பல தசாப்தங்களாக கிடப்பில் உள்ள திண்டிவனம் - வந்தவாசி - செய்யார் வழியாக நகரி செல்லும் புதிய ரயில் பாதை திட்டத்திற்குப் போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். இது வந்தவாசியைச் சென்னை மற்றும் திருப்பதியுடன் இணைக்கும் ஒரு முக்கிய வணிகத் தடமாக மாறும். அதேபோல், இத்தொகுதியின் அடை யாளமான பாய் நெசவுத் தொழிலைப் பாதுகாக்க, ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம் மூலம் ஒரு நவீன &lsquo;தொழில் தொகுப்பு&rsquo; (Cluster) மற்றும் ஏற்றுமதி மையத்தை உரு வாக்கி, &lsquo;ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு&rsquo; திட்டத்தின் கீழ் உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்கவும், திண்டிவனம் - வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் கொண்டு வந்து தரமான நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். மேலும், வந்தவாசியில் பிரசித்தி பெற்ற பேருந்து பாடி கட்டும் தொழில் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நவீனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க &lsquo;திறன் இந்தியா&rsquo; திட்டத்தின் கீழ் பிரத்யேக பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். வேளாண்மை சார்ந்த முன்னேற்றத்திற்காக, ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் விதைப் பண்ணைத் திட்டத்தை வலுப்படுத்துவ தோடு, நெல் மற்றும் இதர விளை பொருட்களைப் பாதுகாக்கப் பெரிய அளவிலான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கித் தருவது இத்தொகுதியின் பொரு ளாதார நிலையை அடியோடு உயர்த்தும். மாறாக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியானது வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், பாய் நெசவாளர்களின் வாழ்வு, இளை ஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் நீர் உரிமை ஆகியவற்றை உறுதி செய்தால் மட்டுமே வந்தவாசி மேலும் தொகுதி வளர்ச்சியைப் பெறும்.&rdquo; ஜே. எஸ். கண்ணன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.