முந்தய பக்கம்

குடிமனைப்பட்டா வழங்கிய எம்எல்ஏவுக்கு இருளர் இன மக்கள் நன்றி!

9 Mar 2026, 4:24 pm
குடிமனைப்பட்டா வழங்கிய எம்எல்ஏவுக்கு இருளர் இன மக்கள் நன்றி!
<p><strong>குடிமனைப்பட்டா வழங்கிய எம்எல்ஏவுக்கு இருளர் இன மக்கள் நன்றி!</strong></p> <p>திருவள்ளூர், மார்ச் 9- திருத்தணியை அடுத்த தாழவேடு பகுதி யில் வசிக்கும் இருளர் இனத்தை சேர்ந்த மக்களுக்கு குடிமனை பட்டாக்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தாழவேடு ஊராட்சியில் உள்ள தாழ வேடு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் இலவச குடிமனை பட்டாக்களை வழங்கினார். அதேபோன்று கோரமங்கலம் &nbsp;6 குடும்பங்கள் மற்றும் கே.ஜி.கண்டிகை கல்கி நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் பண்டி ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 6 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. &nbsp;இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தணி வட்ட செயலாளர் வி.அந்தோணி, &nbsp;வட்ட குழு உறுப்பினர் சின்னபையன், &nbsp;கிளை செயலாளர் லதா, &nbsp;மலைவாழ் மக்கள் சங்க திருவலங்காடு ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். குடிமனை பட்டா வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் துறை யினருக்கு பழங்குடி இன மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த படடாக்கள் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து பழங்குடி இன மக்களின் கோரிக்கைகளுக்காக போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram