தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை வசதிக்கு பல ஆண்டுகளாக ஏங்கும் மலை கிராம மக்கள்!

25 Jan 2026, 6:29 pm
சாலை வசதிக்கு பல ஆண்டுகளாக ஏங்கும் மலை கிராம மக்கள்!
<p><strong>சாலை வசதிக்கு பல ஆண்டுகளாக ஏங்கும் மலை கிராம மக்கள்!</strong></p> <p>தருமபுரி, ஜன.25- பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பல ஆண்டுகளுக்கு மேலாக சாலை &nbsp;வசதியின்றி மலைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தருமபுரி - சேலம் மாவட்ட எல்லையில், ஏற்காடு மலையின் பின்பகுதியில் அமைந்துள்ளது மாரமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கேளையூர், கூத்து முத்தல், தாழ்கோவிலூர், மேல் கோவிலூர், மாரமங்கலம், மதூர், &nbsp;செந்திட்டு, சின்னமதூர், காளிக் காடு, கொட்டசேடு, குட்டமாத்தி காடு, மாவுத்து, நாரதஞ்சேடு, கொம்புதூக்கி, அரங்கம், பொலக் காடு உள்ளிட்ட மலை கிராமங்கள் &nbsp;உள்ளன. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியை சேர்ந்த மக்கள் கல்வி, &nbsp;மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவ சிய தேவைகளுக்காகவும், இப் பகுதியில் விளையும் விவசாயப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும், உணவு பொருட்கள் வாங்கவும் தாழ் கோவிலூரிலிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப் பட்டி நகரத்திற்கு தான் வந்து &nbsp;செல்ல வேண்டும். பல ஆண்டு களுக்கு மேலாக இம்மலை கிராம மக்கள் தொடர்ந்து இங்கு தான் வந்து செல்கின்றனர். ஆனால், மிக &nbsp;அருகாமையில் உள்ள பாப்பி ரெட்டிப்பட்டியில் இருந்து தாழ் கோவிலூர் வரை முறையான சாலை வசதி இதுவரை ஏற்படுத்தப் படவில்லை. இதனால் ஒற்றையடிப் பாதையிலும் (கொடி வழியில்), கரடு முரடான மண் பாதையிலும் சென்று வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிச.1 &nbsp;ஆம் தேதியன்று வனத்துறை அதி காரிகள் 6 கி.மீ., நேரடியாக மார மங்கலத்திற்கு நடந்து சென்று &nbsp;சாலை அமைக்க ஆய்வு செய்தனர். &nbsp;ஆனால், ஆய்வுவோடு நின்று விட் டது. இச்சாலை அமைக்கப்பட்டால் மாரமங்கலத்திற்கு எளிதில் செல்ல முடியும். பாப்பிரெட்டிப்பட்டி முதல் ஏற்காடுக்கு விரைவான போக்குவரத்து வசதி ஏற்படும். ஆகவே, இவ்வழியாக மண்சாலை யாகவோ, தார் சாலையாகவோ ஏற்படுத்த வேண்டும் என்பது இம் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும், கனவாகவும் உள்ளது. இம்மக்களின் கனவு களை நிறைவேற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என்பதே அனைவரின் கோரிக்கை யாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.