தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டு மக்கள் நம்பிட வேண்டும்

7 Apr 2026, 5:38 pm
நாட்டு மக்கள் நம்பிட வேண்டும்

நாட்டு மக்கள் நம்பிட வேண்டும்

தேர்தல் ஆணையத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது;  தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் எவ்வித அச்சத்துக்கு இட மின்றியும் நடைபெறும் என்று ஞாயிறன்று கொல் கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

உண்மைதான். ஆணையம் அவரது நம்பிக் கைக்கு உரியதாக இருக்கிறது என்பதில் யாருக் கும் சந்தேகமில்லையே. அரசியல் சட்டரீதியாக நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றுச் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம், வரம்பைத் தாண்டி தேர்தல் ஆணையம், சிறப்புத்தீவிரத் திருத்தம் என்று குடியுரிமையைத் தீர்மானிக்கும் நடவடிக்கை களில் தீவிரமாக இறங்கியிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டார்களே நாட்டுமக்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மாதிரி நடத்தை விதிகளை மீறி சிறுபான்மையின ருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுப் புகார்கள் வந்த போதும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலை வர்கள் மீது தேர்தல் ஆணையம், உரிய நடவடிக்கை  எடுக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது. ஏனென்றால் 2019 மக்களவைத் தேர் தலை விட 2024 தேர்தலில் 6 மடங்கு வெறுப்புப் பேச்சுக்கள் பேசப்பட்டன. இதில் ஆதித்யநாத் (73) முதலிடத்திலும் மோடி(61) இரண்டாமிடத்தி லும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் சுதந்தி ரமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வது பாஜக ஆட்சியில் கானல் நீர் போலாகிக் கொண்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு தேர்தலின்போது சிவசேனை தலைவர் பால்தாக்கரே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால் அவருக்கு 6 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தேர்தல் ஆணை யத்தாலும் நீதிமன்றத்தாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் ஆர்.வி.எஸ்.பெரிசாஸ்திரி.

வாக்குப்பதிவின் போது சிறுபான்மையினர், தலித் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகை யில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்களிலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நியாய மான தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வில்லை என்கிற புகார்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைய நடந்தன.

மிக முக்கியமாக வாக்குப்பதிவின் போது பதி வான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குக ளுக்குமான முரண்பாடுகளை 2019, 2024 மக்க ளவை தேர்தல்களிலும் தில்லி, ஹரியானா மாநில தேர்தல்களிலும் ஜனநாயக சீர்திருத்தங்க ளுக்கான அமைப்பு, தி வயர் இணைய இதழ்  போன்றவை சுட்டிக்காட்டின. பிரேசில் பெண் ஒருவ ரின் புகைப்படம் 20 இடங்களில், வெவ்வேறு பெயர் களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது பேசு பொருளாகி உலகின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் அண்மையில் பீகார் தேர்த லில், பெருமளவு வாக்காளர் நீக்கப்பட்டதும், அதே முறையையே தற்போது நடைபெறும் 5 மாநி லத் தேர்தல்களிலும் கடைப்பிடிப்பதையும் நினைத் துத்தான் பிரதமர் மோடி தேர்தல் ஆணையத் தின் மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவரது ஆட்சியின் அத்துமீறல்களுக்கு 5 மாநிலத் தேர்த லில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.