ஆன்மீகத்தின் உண்மையும், மதவெறியின் ஆபத்தையும் பிரித்துணர்வார்கள் தமிழக மக்கள்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>ஆன்மீகத்தின் உண்மையும், மதவெறியின் ஆபத்தையும் பிரித்துணர்வார்கள் தமிழக மக்கள்</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.6 - தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தமுஎகச மாநில மாநாட்டில் துவக்கமாக நடைபெற்ற கலை மாலையில் தமுஎகச மதிப்புறு தலைவரும், நாடாளுமன்ற உறுப் பினருமான சு.வெங்கடேசன் கருத்து ரையாற்றினார். அப்போது அவர் பேசியது: இந்தியாவில் மிக அதிகமாக கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அதல்லாது ஏராளமான கோவில்கள் என கிட்டத்தட்ட 1 லட்சம் கோவில்கள் உள்ளன. இருப்பினும் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை யில், இடதுசாரி சித்தாந்தம் கொடி கட்டிப்பறக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆன்மீகத்தின் உண்மையும், மதவெறியின் ஆபத்தையும் பிரித்து ணர்ந்து பார்க்கும் தன்மை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது. அரசியல் சுய லாபத்துக்காக, வாக்கு வங்கிக்கு ஆன்மீகத்தை பயன்படுத்தினால், அதை இனம் கண்டு ஒதுக்கும் பகுத்த றிவு இந்த மண்ணில் இருக்கிறது. அறிவுத் திருவிழாவை நடத்தும் இந்த வேளையில் மதவெறி அரசியல் நடத்துபவர்களை பொசுக்கும் ஆற்றல் எங்களுக்குண்டு. நாங்கள் வெறும் கையோடு வருவோம், ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்கான ஆயுதங்களை எங்க ளது முன்னோர் கலை, இலக்கி யம், அரசியல் என்று அனைத்திலும் அள்ளி வழங்கியுள்ளனர். எனவே தான் இன்றைக்கு ஒரு கோவில் வரலாற்றை யோ, தீர்ப்பையோ எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு முதல் எதிரியாக யார் வந்து நிற்கிறார்கள் தெரியுமா, இடது சாரிகளோ, திராவிட இயக்க மோ அல்ல, அந்த கோவில் சார்ந்து எழு தப்பட்ட வரலாறுகள், அனைத்தும் மத வெறிக்கு எதிராக வந்து நிற்கும். இந்தியாவில் பிரதமர் நேரு இந்திய தொல்லியல் துறையை தொடங்கி னார். ஆனால் இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் தொல்லியல் துறை தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். 70 ஆண்டுகளாக தமிழகத்தில் அறிஞர்கள் எழுதி வைத்த பொக்கிஷம் தான் இந்த மதவெறியர்களுக்கு எதிரான கொடையாக உள்ளது. இன் றைக்கு திருப்பரங்குன்றத்தில் எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என 16 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை 1981 இல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை புத்தகமாக வெளி யிட்டுள்ளது. நீங்கள் எதை மறுப்பீர் கள், அதிகாரத்தின் துணை கொண்டு நீங்கள் ஒரு உண்மையை மறுக்கலாம், நூற்றுக்கணக்கான உண்மை மக் களின்வாழ்க்கை முழுவதும், தமிழ் சமூ கத்தின் மீதும் வரலாற்றிலும் இருக்கிறது. இந்தியாவிலே 1950க்கு பிறகு கோவில் சார்ந்த ஆய்வு நூல்கள் தமிழ கத்தை தவிர வேறு எங்கேயும் இல்லை. சமஸ்கிருதத்தோடு ஏன் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறீர்கள் எனக் கேட்டால், எங்கள் ரத்தத்தில் உள்ள டிஎன்ஏவின் மரபணு அப்படி. அதிகா ரத்துக்கு எதிராக, வறுமையிலே வாடி னாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்ட தமிழ் புலவனின், இந்த தமிழ் சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இதுபோன்ற நூற்றுக்கணக் கான இலக்கிய இயக்கங்கள் உள்ளன. அதில் தனக்கான ஒரு இயக்கம் தான் இந்த தமுஎகச. இதன் மாநாடு வெற்றியடையட்டும்” என்றார். இதில் மேனாள் ஒன்றிய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் ச.சு.பழநிமாணிக்கம், தமுஎகச மாநில துணைத்தலைவர் ரோகிணி, பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில பொருளாளர் சைதை ஜெ உள் ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மூத்த சதிராட்டக் கலைஞர் பத்மஸ்ரீ இரா. முத்துக்கண்ணம்மாள் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார். நிறைவாக, தமுஎகச தஞ்சை மாவட்டத் தலைவர் முருக.சரவணன் நன்றி கூறினார். கி.அன்பரசன் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். மாநில மாநாடு தஞ்சை மணிமண்ட பம் அருகே உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.</p>
