தமிழக மக்கள் பாஜக - அதிமுக கூட்டணிக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
24 Jan 2026, 3:38 pm
<p><strong>தமிழக மக்கள் பாஜக - அதிமுக கூட்டணிக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!</strong></p>
<p>சிதம்பரம், ஜன 23- சந்தர்ப்பவாத அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.23) செய்தியாளர்களிடம் அவர் கூறி யது வருமாறு: பாஜக - அதிமுக நகைச்சுவை அதிமுகவை மூன்றாக உடைத்து விட்டு, தற்போது அந்த பிரிவுகளையே சேர்த்துக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற்றுள்ளதாக பாஜக கூறுகிறது. அதேபோல பாமக அன்பு மணி பிரிவை சேர்த்துக் கொண்டு, அதிமுக அணி வலிமை பெற்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இது மிகவும் நகைச்சுவையானது. பாதுகாப்பு தேடி டிடிவி தினகரன் கூட்டணி இடைப்பட்ட காலத்தில் டிடிவி தின கரன், என்டிஏ கூட்டணி குறித்தும், எடப் பாடி பழனிசாமியைப் பற்றியும், பாஜக வைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். என்டிஏ-வுடன் கூட்டணி வைப்ப தற்குப் பதில் தூக்கு மாட்டிக்கொள்ளலாம் என்று கூடக் கூறினார். ஆனால் பதவி, சந்தர்ப்பவாதம் மற்றும் தங்களைப் பாது காத்துக் கொள்ளும் நோக்கத்தோடு தற் போது பாஜகவோடு கூட்டணி சேர்ந்து உள்ளார். இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. உரிமைகளைப் பறித்த விபி-ஜி ராம் ஜி! ஒன்றிய பாஜக அரசு இந்த 10 ஆண்டு களில் சாதாரண ஏழை, எளிய மக்களுக் கான எந்தத் திட்டத்தையும் அறிவிக்க வில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான ‘நூறு நாள் வேலை’ திட்டத்தை, விபி-ஜி ராம் ஜி என்ற புதிய திட்டம் மூலம் சிதைத்துவிட்டு, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வாக்கு கேட்க வந்துள்ளார். காந்தி பெயரை நீக்கி யது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக அந்தத் திட்டத்தில் உள்ள சட்ட உரிமை களையே பறித்து விட்டது ஒன்றிய அரசு. மாநிலங்கள் மீது ஏற்றப்பட்ட நிதிச்சுமை இதுவரை 90 சதவிகித ஒன்றிய அரசு நிதியும், 10 சதவிகித மாநில அரசு நிதியுட னும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. தற்போது ஒன்றிய அரசு 60 சதவிகித நிதி யும், மாநில அரசு 40 சதவிகித நிதியும் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. 40 சதவிகித நிதியை மாநில அரசு ஒதுக்கினால்தான், ஒன்றிய அரசு மீதி நிதியை வழங்கி திட்டத்தை நிறை வேற்றும். ஏற்கெனவே பாஜகவின் கொள் கைகளால் பல்வேறு மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மேலும் நிதிச் சிக்கலை உருவாக்கும். எடப்பாடி வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள் மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஏற்கெனவே ஆட்சி யில் இருந்தபோது, ஏன் அவர் ரூ. 2000 வழங்கவில்லை? திமுக அரசு மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்த போது, அரசால் அதைக் கொடுக்க முடி யாது என சொன்னவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக அரசு 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறது. எனவே, பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். அந்தக் கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தைப் புகட்டுவார்கள். உதயநிதியை பேச்சில் இட்டுக்கட்டும் நீதிபதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டை நடத்தியது. அதில், இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பேசுகையில், ஏற்றத்தாழ்வு கற்பித்து மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் எனப் பேசினார். வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும் எனவும் கூறினார். ஆனால், சனாதனக் கோட்பாட்டிற்கு எதிரான பேச்சை, இந்துக்களுக்கு எதிரான பேச்சு என்று நீதி பதி இட்டுக்கட்டிக் கூறுவது மோசமானது. நீதிபதி சனாதனத்தை விரும்புகிறாரா? அல்லது வர்ணாசிரம தர்மத்தைப் பின் பற்ற வேண்டும் என்கிறாரா? அது இந்திய அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதா? சனா தனத்தை ஒழிப்பது என்பது அதை நம்பு கிற இந்து மக்களை ஒழிப்பது என்று எப்படி அர்த்தமாகும்?” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி னார். பேட்டியின் போது மாவட்டச் செயலா ளர் கோ. மாதவன், நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத்தலைவர் முத்துகுமரன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.</p>
