எஸ்ஐஆரை ஆதரிக்கும் அதிமுகவை தமிழக மக்கள் தண்டிப்பார்கள்! பெ. சண்முகம் காட்டம்
10 Nov 2025, 2:46 pm
<p><strong>எஸ்ஐஆரை ஆதரிக்கும் அதிமுகவை தமிழக மக்கள் தண்டிப்பார்கள்! பெ. சண்முகம் காட்டம்</strong></p>
<p>சென்னை: எஸ்ஐஆரை ஆதரிக்கும் அதிமுகவை தமிழக மக்கள் தண்டிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூகவலைதள பக்கத் தில் பதிவிட்டிருப்பதாவது: சிஏஏ - என்ஆர்சி (CAA-NRC) என்ற குடியுரிமை பறிப்புச் சட்டத்தை ஆதரித்த அதிமுக, வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் (SIR)-ஐ ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணல். தமிழக மக்கள் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எனவே, நவம்பர் 11 திமுக தலை மையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பீர். இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.</p>
