தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இ.எம்.எஸ் காட்டிய வழி... தொடரும் கேரள மாதிரி!'

19 Mar 2026, 3:18 pm
இ.எம்.எஸ் காட்டிய வழி... தொடரும் கேரள மாதிரி!'
<p><strong>இ.எம்.எஸ் காட்டிய வழி... தொடரும் கேரள மாதிரி!&#39;</strong></p> <p>&ldquo;கேரளத்தின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட சிற்பி தோழர் இ.எம்.எஸ் அவர்களின் நினைவுகளே, புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றான நமது பயணத்திற்கு என்றும் ஊக்கமளிக்கும்&rdquo; என கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தோழர் இ.எம்.எஸ் அவர்களின் &nbsp;28-ஆவது நினைவு தினமான மார்ச் 19 வியாழனன்று, தர்மடம் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள முதல்வர் பினராயி விஜயன், பகிர்ந்துள்ள முக்கிய கருத்துக்கள்: வரலாறு படைத்த வழிகாட்டி ஒரு சிறந்த நிர்வாகியாகவும், சிந்தனையாளராகவும் கேரள வரலாற்றில் இ.எம்.எஸ் அவர்கள் ஏற்படுத்திய செல்வாக்கு ஈடு இணையற்றது. 1957-இல் அவரது தலை மையில் அமைந்த முதல் அமைச்சரவை கொண்டு வந்த நிலச் சீர்திருத்தம் மற்றும் கல்வி மசோதாக்கள் தான், அன்றைய சாதிய - நிலப்பிரபுத்துவ கட்டமைப்புகளைத் தகர்த்து எறிந்தன. இன்று உலகமே வியந்து பார்க்கும் &lsquo;கேரள மாதிரி&rsquo; வளர்ச்சிக்கான விதை அப்போதுதான் போடப்பட்டது. காலத்திற்கேற்ற புதிய மாற்று வெறும் புகழ்ச்சியுடன் நின்றுவிடாமல், கேரள மாதிரியில் உள்ள சவால்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்தவும் அவர் தயங்கியதில்லை. பொருளாதார வளர்ச்சி யுடன் சமூக நலத்துறைகளும் முன்னேற வேண்டும் என்ற அவரது தொலைநோக்குப் பார்வையில் பிறந்ததுதான் &lsquo;சர்வதேச கேரள ஆய்வுக் காங்கிரஸ்&rsquo;. அதன் தொடர்ச்சி யாகவே, கடந்த பத்து ஆண்டுகளாக இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு, கார்ப்பரேட் நலன்களுக்குப் பலியாகாமல் ஒரு மக்கள் நல மாற்று வளர்ச்சி மாதிரியை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. சித்தாந்தப் போர் இன்றைய சூழலில், மதவாத சக்திகளும் புதிய தாராளமயக் கொள்கைகளும் கைகோர்த்து மாநில உரிமைகளை நசுக்கப் பார்க்கின்றன. இத்தகைய நெருக்கடி நிலையில், இ.எம்.எஸ் அவர்களின் மார்க்சியப் பார்வையும், சமரசமற்ற போராட்ட &nbsp;குணமுமே நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகும். கேரளத்தின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்க மாகக் கொண்டுள்ளதை முதல்வர் தனது பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். மக்களின் அன்பு - அசைக்க முடியாத பலம் வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வு குறித்துப் பகிர்ந்துள்ள முதல்வர், பினராயி விஜயன் &ldquo;புதனன்று நடைபெற்ற தர்மடம் தொகுதி தேர்தல் மாநாட்டில், பத்தனாபுரம் காந்தி பவன் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் எனக்காக வழங்கிய தேர்தல் நிதியை ஒரு சிறப்பான அனுபவமாகக் கருதுகிறேன். இ.எம்.எஸ் அவர்களின் நினைவுகளும், மக்களின் இந்த அளவற்ற அன்பும், அசைக்க முடியாத ஆதரவுமே இந்தத் தேர்தலில் எல்.டி.எப்-க்கு மிகப் பெரிய வலிமையைத் தரும்&rdquo; என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.