வறுமை கொடுத்த வலி... விடாமுயற்சி தந்த ஒளி! அரசுப் பள்ளி மாணவன் ஆண்டனி ராஜின் சாதனை!
20 Feb 2026, 2:39 pm
<p><strong>வறுமை கொடுத்த வலி... விடாமுயற்சி தந்த ஒளி!</strong></p>
<p>ஒரு பழைய மிதிவண்டி, கிழிந்த காலணிகள், பசி கலந்த பொழுது கள் - இவை எவையும் ஒருவனின் லட்சி யத்தை முடக்கிவிட முடியாது என்ப தற்கு சாட்சியாக நிற்கிறார் கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த மாண வன் ஆண்டனி ராஜ். அருணாச்சலப் பிர தேசத்தின் பனிமலை சிகரங்களில், தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்து மாண வன் தேசிய அளவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்துள்ளார். கருமத்தம்பட்டி வினோபா நகரில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளான ஜெபமாலை மேரி - லாரன்ஸ் தம்பதியி னரின் இளைய மகன் ஆண்டனி ராஜ். வாகரயாம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயி லும் இந்த சிறுவனுக்கு, சிறுவயது முதலே சைக்கிள் ஓட்டுவது என்றால் கொள்ளை பிரியம். ஆனால், ஒரு வேளை உணவிற்கே திண்டாடும் குடும்பச் சூழலில், பல லட்சங்கள் மதிப்புள்ள ‘மவுண்டன் பைக்’ என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. “என் மகன் தேசிய அளவில் பதக்கம் வெல் வான் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை” என அவரது தாய் ஜெபமாலை மேரி கண்ணீர் மல்கக் கூறியபோது, அங்கிருந்தவர்களின் கண்கள் நனைந்தன. ஆண்டனி ராஜின் திறமையை உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் கண்ட றிந்தாலும், முறையான கியர் சைக்கிள் இல்லாதது பெரிய தடையாக இருந் தது. அப்போதுதான் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி யோகிதா, தனது பெற்றோர் தனக்கு ஆசையாக வாங்கித் தந்த விலை உயர்ந்த சைக் கிளை, “அண்ணன் ஜெயிக்கட்டும்” என்று மனமுவந்து கொடுத்து உதவி னார். சக மாணவியின் அந்தப் பெருந் தன்மைதான் ஆண்டனி ராஜை அருணாச்சலப் பிரதேசம் வரை அழைத்துச் சென்றது. பள்ளித் தலைமை ஆசிரியரின் நிதி யுதவியுடன் அருணாச்சலப் பிரதேசம் சென்ற ஆண்டனி ராஜ், அங்கு நிலவிய கடும் குளிரையும், கரடுமுரடான மலைப் பாதைகளையும் எதிர்கொண் டார். தமிழகத்திலிருந்து சென்ற 28 மாணவர்களில், அரசுப் பள்ளியில் பயின்று பதக்கம் வென்ற ஒரே மாண வர் ஆண்டனி ராஜ் என்பது குறிப் பிடத்தக்கது. 16 வயதிற்குட்பட் டோர் பிரிவில் பங்கேற்று, ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று ஒட்டுமொத்த தேசத்தின் கவ னத்தையும் ஈர்த்துள்ளார். பதக்கங்களுடன் கோவை திரும் பிய ஆண்டனி ராஜுக்கு மோப்பிரிப் பாளையம் பேரூராட்சி முதல் பள்ளி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத் திற்கு மக்கள் திருவிழா போல வரவேற்பு அளித்தனர். ஆசிரியர்க ளும், மாணவர்களும் அவரை தோளில் சுமந்து கொண்டாடிய காட்சி, “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக அமைந்தது. தனது வெற்றி குறித்து ஆண்டனி ராஜ் பேசுகையில்: “மலைப் பாதைகளில் சைக்கிள் ஓட்டியது ஒரு சவாலான அனுபவம். முறையான பயிற்சியும், நவீன சைக் கிளும் கிடைத்தால் சர்வதேசப் போட்டி களில் பங்கேற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதே எனது வாழ்நாள் லட்சியம்.” என்றார். ------------------- “இற்றுப்போன காலணிகள்... ஏழ்மை சுமந்த பாதங்கள்... ஆனாலும் முடங்கிவிடவில்லை அவன் லட்சியத்தின் சக்கரங்கள்! இரவல் தந்த மிதிவண்டி - அதில் இமயம் தொட்டது ஒரு தமிழ்க் குருதி! பனி படர்ந்த மலைப்பாதை - உன் பயிற்சிக்கு முன்னால் வெறும் தூசு! அரசுப் பள்ளிக் கோபுரம் - இன்று அருணாச்சலத்துச் சிகரம்! தடைகளைத் தகர்த்தவன் - நம் ஆண்டனி ராஜ் என்னும் வைரம்!” ------------------- இதுகுறித்து அப்பகுதியின் சமூக செயற்பட்டாளர் சாமிநாதன் கூறுகை யில், அரசுப் பள்ளி மாணவர் ஆண்டனி ராஜின் இந்தச் சாதனை வெறும் ஒரு தனி மனித வெற்றி மட்டுமல்ல; வசதி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கோடிக் கணக்கான கிராமப்புற மாணவர்க ளின் நம்பிக்கைக் கீற்று. எனவே, தமி ழக அரசு மற்றும் விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், ஆண்டனி ராஜ் சக மாணவியின் சைக்கிளைப் பயன் படுத்தியே வெற்றி பெற்றுள்ளார். சர்வ தேசப் போட்டிகளில் பங்கேற்க லட் சக்கணக்கில் மதிப்புள்ள அதிநவீன MTB (Mountain Terrain Bike) அவசி யம். இதனை தமிழக அரசு அவருக்கு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். கரடுமுரடான மலைப் பாதைகளில் பயிற்சி பெற தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சத்தான உணவு முறைகளுக்கான சிறப்பு நிதி யுதவியை அரசு வழங்க வேண்டும். தேசிய அளவில் பதக்கம் வென்ற இம் மாணவனின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்பதுடன், எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான முன்னு ரிமை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இது போன்ற மலைவாழ் மற்றும் கிராமப் புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ‘சைக்கிளிங் டிராக்’ (Cycling Track) வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார். - கார்த்திக் மதிவாணன்</p>
