பிப்.2 ஆம் தேதி அமைப்புக் குழு கூட்டம் அனைத்து பனியன் சங்க கூட்டத்தில் முடிவு
13 Jan 2026, 3:17 pm
<p><strong>பிப்.2 ஆம் தேதி அமைப்புக் குழு கூட்டம் அனைத்து பனியன் சங்க கூட்டத்தில் முடிவு</strong></p>
<p>திருப்பூர், ஜன.13- பிப். 12 வேலை நிறுத்தம் தொடர்பாக பிப்.2 ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்ட அமைப்புக் குழு கூட்டம் நடத்துவது என அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிப்.12 வேலை நிறுத்தம் குறித்து அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்க ளின் கூட்டம் செவ்வாயன்று சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பனியன் சிஐடியு பனியன் சங்க பொதுச் செய லாளர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். சிஐடியு பனியன் சங்க பொருளாளர் நாகராஜ், ஏஐடி யுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் என். சேகர், மாவட்டச் செயலாளர் செந்தில்கு மார், எல்.பி.எப். பொருளாளர் பூபதி, ஐஎன்டி யுசி செந்தில்குமார், ரஜினி, எச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் முத்துசாமி, துணைச் செயலாளர் கோவிந்தசாமி, எம்.எல்.எப். மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், டி.டி. எம்.எஸ் செயலாளர் மனோகர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், நாடு முழுவதும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறுகிற பொது வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அனைத்து பனியன் உற் பத்தியாளர்கள் சங்கத்திற்கும், தொழிலாளர் துறையினருக்கும் நோட்டீஸ் வழங்குவது. ஒரு லட்சம் கோரிக்கை விளக்க நோட்டீஸ் மற்றும் போஸ்டர்கள் அடிப்பது. பிப்.2 ஆம் தேதி மாவட்ட அளவிலான அமைப்புக்குழு கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
