ஒற்றையடிப் பாதையில் சடலத்தை எடுத்துச்செல்லும் அவலம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>ஒற்றையடிப் பாதையில் சடலத்தை எடுத்துச்செல்லும் அவலம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.18- பொம்மிடி அருகே ஒன்றையடிப் பாதையில் சடலத்தை எடுத்துச்செல்லும் அவலத்தை போக்க, மயா னத்திற்கு சாலை வசதி ஏற்ப டுத்தித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப் பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி, 4 ஆவது வார்டுக்குட்பட்டது பாரதி நகர். இங்குள்ள மக்கள் முறையான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்ற னர். இப்பகுதியில் வசித்து வந்த ராமன் என்ப வரின் மனைவி சரோஜா (55), கடந்த சில நாட் களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், செவ்வாயன்று உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரை எடுத்து சென்று சுடுகாட்டில் புதைப்பதற்கு பாதை இல்லாத நிலையில், உறவினர்கள் சிரமத்திற்குள்ளாகி ஒத்தையடி பாதையில் சுமார் 3 கிலோ மீட் டர் தூரம் எடுத்துச் சென்று, சடலத்தை அடக் கம் செய்தனர். போதிய அடிப்படை வசதி கள் வசதிகள் இல்லாத நிலையில், அப்பகுதி மக்கள் சொந்த இடம் இருந்தும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
