மக்களுக்காகக் களத்தில் நிற்கும் ஒரே ‘ஹீரோ’ சிபிஎம் பெ.சண்முகம் முழக்கம்
6 Feb 2026, 3:38 pm
<p><strong>மக்களுக்காகக் களத்தில் நிற்கும் ஒரே ‘ஹீரோ’ சிபிஎம் பெ.சண்முகம் முழக்கம்</strong></p>
<p>நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பேரவை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்செங்கோடு நகர ஒன்றிய குழுக்கள், குமாரபாளையம் நகர குழு, பள்ளிபாளையம் வடக்கு ,தெற்கு ஒன்றிய குழுக்கள் சார்பில் வீடு வீடாக மக்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 5லட்சத்தை கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினர். </p>
<p>நாமக்கல், பிப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்தல் எண்ணிக்கையோடு மட்டும் ஒப்பிடக் கூடாது என்றும், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் களங்களில் முதன்மையான ‘கதாநாயகனாக’ நின்று போராடுவது சிபிஎம் மட்டுமே என்றும் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் தெரிவித்தார். பள்ளி பாளையத்தில் நடைபெற்ற கட்சி நிதியளிப்புப் பேரவையில் அவர் உரையாற்றினார். இடதுசாரிகள் 64 எம்பிக்களுடன் தில்லியில் வலுவாக இருந்த போது தான் 100 நாள் வேலைத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற மகத்தான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதை நினைவு கூர்ந்த அவர், ஆட்சியில் இல்லாமலேயே பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும் என நிரூபித்தோம் என்றார். தமிழகத்தில் 8 மணி நேர வேலை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறச் செய்தது, 36 நாள் போராட்டத்தின் மூலம் சாம்சங் தொழிலாளர் சங்கப் பதிவை உறுதி செய்தது மற்றும் விவசாயிகளின் நில உரிமைகளுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டது எனச் சிபிஎம்மின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மக்கள் நலனில் சிபிஎம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், ஏழைகளின் பட்டா உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். அசோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உழைக்கும் மக்களிடம் திரட்டப்பட்ட ரூ. 5 லட்சம் நிதியை மாவட்டச் செய லாளர் எஸ். கந்தசாமி மற்றும் தலைவர்கள் மாநிலச் செயலாளரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லி பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, எம்.கணேச பாண்டியன், எம்.ஆர்.முருகேசன் மற்றும் ஒன்றிய செய லாளர்கள் சந்திரமதி, லட்சுமணன், கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
