அதிகாரத்தை வென்ற அறப்போராட்டம் சிதம்பரத்துச் சிறுவர்கள் காட்டிய பாடம்!
6 Mar 2026, 3:17 pm
<p><strong>அதிகாரத்தை வென்ற அறப்போராட்டம் சிதம்பரத்துச் சிறுவர்கள் காட்டிய பாடம்!</strong></p>
<p>நீதிமன்ற உத்தரவு, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற அதிகார வர்க்கத்தின் வறண்ட சட்டங்களுக்கு மத்தியில், மனிதா பிமானமும் கல்வி உரிமையுமே மேலானது என்பதைச் சிதம்பரத்துச் சிறுவர்கள் நிரூ பித்துக் காட்டியுள்ளனர். தங்கள் கண் முன்னே வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டு அஞ்சி ஓடாமல், கையில் பாடப் புத்தகங்களை ஏந்தி பொக்லின் இயந்தி ரத்தின் முன் அமர்ந்து அந்தப் பிஞ்சுகள் நடத்திய அறப்போராட்டம், தமிழகத் தையே நெகிழச் செய்திருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக வாழ்ந்த வீடுகள் தரைமட்டமாவதைவிட, தங்களின் கல்வி எதிர்காலம் சிதைந்து விடக் கூடாது என்ற அந்த மாணவர்க ளின் தெளிவு மகத்தானது. பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வந்த அந்தத் தவிப்பு எத்தகையது? அப்படியிருக்கை யில், தேர்விற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் இடிப்பு நடவடிக் கையைத் தொடங்குவது அதிகார வர்க்கத்தின் இதயமற்ற போக்கையே காட்டுகிறது. இந்த இக்கட்டான சூழலில், “நாங்கள் இருக்கிறோம்” என்று மக்கள் பக்கம் நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரின் (சிபிஎம்) பங்கு பாராட்டுதலுக் குரியது. வெறும் கண்டனங்களோடு நின்று விடாமல், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் களத்திற்கு விரைந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில் குமார் ஆகியோரிடம் முறை யிட்ட விதம் ஒரு மக்கள் இயக்கம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்குச் சான்றா கும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப் ப்பளித்து, தேர்வு முடியும் வரை கால அவகாசம் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோரின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், ஒரு போராட்டத்திற்குப் பிறகே மனிதாபிமானம் துளிர்க்க வேண்டும் என்பது அதிகார இயந்திரத்தின் பலவீனத் தையே சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகத் துணிச்சலுடன் நின்ற அந்தப் பிஞ்சுகளும், அவர்களுக்குத் தோள் கொடுத்த செங்கொடி இயக்கத்தி னரும் இன்றையச் சூழலில் நம்பிக்கை யின் அடையாளங்கள். சட்டம் என்பது மக்களைக் காக்கவே தவிர, அவர்களின் எதிர்காலத்தை அழிக்க அல்ல என்பதைச் சிதம்பரத்துச் சிறுவர்கள் அதிகார மையங்களுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். - (அ.விஜயகுமார்)</p>
