முந்தய பக்கம்

ஷிண்டே செலவழித்த பணம் ஒரு ஏழை நாட்டின் பொருளாதாரத்தை ஆதரித்திருக்கும்

23 Dec 2025, 4:05 pm
ஷிண்டே செலவழித்த பணம் ஒரு ஏழை நாட்டின் பொருளாதாரத்தை ஆதரித்திருக்கும்
<p><strong>ஷிண்டே செலவழித்த பணம் ஒரு ஏழை நாட்டின் பொருளாதாரத்தை ஆதரித்திருக்கும்</strong></p> <p>மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்த லில் ஷிண்டே (சிவசேனா) செல வழித்த பணம் ஒரு ஏழை நாட்டின் பொருளாதாரத்தை ஆதரித்திருக்கும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ் வர்தன் சப்கல் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,&ldquo;மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. நாங்கள் மகாயுதியின் (பாஜக கூட்டணி) பணம் மற்றும் அதிகாரத்திற்கு எதிராகப் போராடினோம். மாநிலத் தேர்தல் ஆணை யம் பாரபட்சமாக செயல்பட்டது. முதல மைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், அவரது இரண்டு துணை முதல மைச்சர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் அழுத்தத்தின் கீழ் நிர்வாகம் நெறிமுறையற்ற முறை யில் செயல்பட்டது. வரலாற்றில் முதன் ்முறையாக ஒரு உள்ளாட்சித் தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டது. குறிப்பாக ஷிண்டே குழு செலவழித்த பணம் ஒரு ஏழை நாட்டின் பொருளாதாரத்தை ஆதரித்திருக்கும். பாஜகவும் அதே நிலையில் உள்ளது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் என்ன செய்தது? &nbsp;ஆட்சியாளர்கள் பயங்கரவாதத் தைப் பயன்படுத்தி போட்டியின்றி தேர்தல்களை நடத்துவதை அனை வரும் பார்த்தார்கள். அதன் மீது ஆணை யம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. வார்டு கட்டமைப்பில் கூட, ஆட்சியாளர்கள் பயனடைந்தனர்&rdquo; என அவர் குற்றம்சாட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram