தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐ.டி ஊழியர்களின் பணிச்சுமை குறித்த தரவுகள் எதுவும் ஒன்றிய மோடி அரசிடம் இல்லையாம்!

1 Dec 2025, 4:53 pm
ஐ.டி ஊழியர்களின் பணிச்சுமை குறித்த தரவுகள் எதுவும் ஒன்றிய மோடி அரசிடம் இல்லையாம்!
<p><strong>ஐ.டி ஊழியர்களின் பணிச்சுமை குறித்த தரவுகள் எதுவும் ஒன்றிய மோடி அரசிடம் இல்லையாம்!</strong></p> <p>நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்</p> <p>புதுதில்லி, டிச. 1 - நாடு தழுவிய அளவில் தகவல் &nbsp;தொழில்நுட்ப ஊழியர்கள் எதிர் கொள்ளும் பணிச்சுமை, மன அழுத்தம் குறித்த எந்தவொரு ஆய்வும் ஒன்றிய அரசால் நடத்தப் படவில்லை என்பதும், அதுதொ டர்பான தரவுகளே ஒன்றிய அர சிடம் இல்லை என்பதும் அம்பல மாகியிருக்கிறது. சு. வெங்கடேசன் எம்.பி. &nbsp;மக்களவையில் கேள்வி &ldquo;தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிச் சுமை, மன அழுத்தம், உடல் நலம் தொடர்பான தொழில்சார் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்து, &nbsp;அரசாங்கம் தரவுகளைக் கொண்டு உள்ளதா? விரிவான ஆய்வு ஏதும் &nbsp;மேற்கொண்டதா? இல்லையெ னில் சுகாதார நிபுணர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழி லாளர் நல அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பரிந்துரைகளை பெறுமா?&rdquo; என்ற கேள்வியை (எண் 38/1.12.2025) நாடாளுமன்றத்தில் சு. வெங்க டேசன் எம்.பி. எழுப்பியிருந்தார். மாநில அரசு தான் பதிலளிக்க வேண்டுமாம் அதற்கு தொழிலாளர் மற்றும் &nbsp;வேலைவாய்ப்புத்துறை இணைய மைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்த லாஜே, பதிலளித்துள்ளார். அதில், &ldquo;தொழிலாளர் நலன் குறித்த அதிகாரம் ஒத்திசைவு பட்டியலில் வருவதால் ஒன்றிய அரசு &nbsp;மற்றும் மாநில அரசுகள் இரண்டின் &nbsp;வரம்பிற்குள்ளும் வந்து விடு கிறது; ஒன்றிய அரசின் தொழில் உறவுகள் ஒன்றிய தொழில் துறை உறவுகளுக்கான அதிகாரிகள் வாயிலாகவும், மாநில அளவிலான தொழில் உறவுகள், மாநில தொழிலாளர் துறையாலும் உறுதி செய்யப்படுகின்றன; பெரும் பாலும் தகவல் தொழில் நுட்பம் &nbsp;சார்ந்த சேவைகள் &lsquo;கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்&rsquo; &nbsp;கீழே வருவதால் அதற்குப் பதி லளிப்பதற்குப் பொருத்தமானது, மாநில அரசே ஆகும்; ஒன்றிய அரசு &nbsp;தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020-ஐ இயற்றியுள்ளது; இது &nbsp;தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரி யும் தொழிலாளர்களின் உடல் &nbsp;நலம், பாதுகாப்பு, நல்வாழ்வை &nbsp;உறுதி செய்கிற நோக்கம் கொண் டது&rdquo; என்று பதிலளித்துள்ளார். &nbsp;பிரச்சனையிலிருந்து கைகழுவும் மோடி அரசு இதனைச் சுட்டிக்காட்டி, தமது &nbsp;சமூகவலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை சு. வெங்க டேசன் எம்.பி. வெளியிட்டுள்ளார். &nbsp;அதில், ஒன்றிய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சரின் பதில் வினோதமாக இருக்கிறது, என்றும்; ஆய்வுகள் நடத்துவது தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச் சகம் பிரச்சனையிலிருந்து கை கழுவுவது கண்டனத்திற்கு உரி யது, என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மாநில அரசின் வரம்பு &nbsp;இப்போது தான் தெரிகிறதா? அவர் மேலும் கூறியிருப்ப தாவது: &ldquo;ஒன்றிய தொழிலாளர் நலத் துறை அமைச்சரின் பதில் வினோத மாக இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் போது &nbsp;இவர்களுக்கு கூட்டாட்சி பற்றியோ, மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு செவி மடுக்க &nbsp;வேண்டும் என்றோ அக்கறை இல்லை. மாறாக, இவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் &nbsp;எதையும் எழுப்பினால் மட்டும் ஒத்தி சைவுப் பட்டியல், மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்று பதில் &nbsp;சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ஐ.டி. ஊழியர்கள் தற்கொலை 27 சதவிகிதம் அதிகரிப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் &nbsp;தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறைகளில் பணியாற்றும் தொழி லாளர்கள் கடும் பணிச் சுமைக்கும், உளவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2018-22க்கு இடைப்பட்ட காலத்தில் 27 &nbsp;சதவிகிதத் தற்கொலைகள் சமூகத் தில் அதிகரித்துள்ளன; சாமானி யர்கள் மத்தியில் மட்டுமின்றி உயர்கல்வி பயின்ற தொழில்நுட்ப பணியாளர்கள் மத்தியிலும் தற்கொலைகள் நிகழ்கின்றன; இத்தகைய சூழலில் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் அது &nbsp;சார்ந்த சேவைகளில் தொழிலா ளர் பணி நிலைமைகள் பற்றிய ஆய்வுகளும் தரவுகளும் தேவை &nbsp;என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இவ்வாறிருக்கையில், ஆய்வுகள் நடத்துவது தனது வேலையே அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை &nbsp;கழுவுவது கண்டனத்திற்கு உரியது. &nbsp;ஒன்றிய அரசின் பதிலிலேயே முரண்பாடு ஆனால் இந்த பதிலிலேயே, &lsquo;ஒன்றிய அரசின் தொழில்சார் பாது காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்- 2020 இந்த &nbsp;தொழிலாளர்களுக்கும் பொருந்தும், அவர்களின் நலனை உறுதி செய் யும்&rsquo; என்று அமைச்சர் கூறியுள்ளார். &nbsp;அப்படியென்றால், இந்த தொகுப்பு சட்டத்தை கொண்டு வரு வதற்கு முன்பாக, இந்த தொழில் களின் பிரத்யேக பணி நிலை மைகளை ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அல்லது எந்த தரவு கள் அடிப்படையில் இந்தச் சட்டம் &nbsp;இறுதி செய்யப்பட்டது? தரவுகளே &nbsp;இல்லை என்றால், நிலைமைகள் பற்றிய தகவல்களும் இல்லை யென்றால் நீங்கள் உருவாக்கி யுள்ள தொகுப்புச் சட்டம் எப்படி &nbsp;அந்த தொழிலில் உள்ள பிரத்யேக பிரச்சனைகளை கணக்கில் கொண்டிருக்கும்?. இந்த கேள்வி களுக்கெல்லாம் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?&rdquo; இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.