தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜான்சிராணி தவறி விழுந்ததாக அமைச்சர் கூறியது தவறானது மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறுப்பு

21 Feb 2026, 3:26 pm
ஜான்சிராணி தவறி விழுந்ததாக  அமைச்சர் கூறியது தவறானது மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறுப்பு
<p><strong>ஜான்சிராணி தவறி விழுந்ததாக &nbsp;அமைச்சர் கூறியது தவறானது மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறுப்பு</strong></p> <p>சென்னை, பிப். 21 - சட்டப் பேரவையில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தின் போது நடைபெற்ற சம்ப வங்கள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த &nbsp;விளக்கத்திற்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் &nbsp;உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மறுப்புத் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19 அன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ எம்.சின்னதுரை எழுப்பிய கேள்விக் குப் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, &ldquo;சங்கப் பொதுச் செயலாளர் ஜான்சிராணி யைக் காவல்துறையினர் தாக்கவில்லை, அவர்தான் தவறி விழுந்துவிட்டார்; காவல் துறையினர்தான் அவரை ஆம்புலன்ஸ் மூலம் &nbsp;மருத்துவமனையில் சேர்த்தனர்&rdquo; என்று கூறி யிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துச் சங்கத்தின் &nbsp;மாநிலத் தலைவர் தோ.வில்சன் வெளியிட் டுள்ள அறிக்கையில், &ldquo;பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது நள்ளிரவில் காவல்துறையினர் எங்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி இழுத்துச் சென்ற னர். அப்போது ஜான்சிராணியைத் தூக்கிய காவலர்கள் அவரை இரண்டு முறை கீழே &nbsp;போட்டனர். படிக்கட்டில் வைத்து இழுத்த னர். இதில் மயக்கமடைந்த அவருக்கு 108 &nbsp;ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவ மனையில் அனுமதித்தது சங்க நிர்வாகிகள் தானே தவிர, காவல்துறையினர் அல்ல&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், &ldquo;சம்பவத்தின் போது காவல் துறை அதிகாரிகள் தங்கள் பெயர்களை மறைத்துக் கொண்டு செயல்பட்டனர். ஜான்சி ராணி தானாகவே விழுந்தார் என அமைச்சர் &nbsp;கூறியது உண்மைக்குப் புறம்பானது. இதற்கான &nbsp;உரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன&rdquo; என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.