அர்ப்பணிப்பின் அளவீடு! - பானு நவீன்
9 Nov 2025, 2:21 pm
<p><strong>அர்ப்பணிப்பின் அளவீடு!</strong></p>
<p>நேசத்தை சோதிப்பது போல் அர்ப்பணிப்பைக்கூட அளவீடு கொண்டு அளக்கிறார்கள் .... 100 க்கும் 99 க்கும் இடையே குறைந்த இடைவெளி என்று எண்ணியிருக்கையில் 10-ஐயும் 100-ஐயும் ஒரே சமகூட்டில் நிறுத்துகிறார்கள்.. கிள்ளியெடுக்கையில் கணக்கு சொல்ல முடியும் அள்ளுவது என்றான பின் எதைக் கொண்டு அதை நிறுத்துவது (அளவிடுவது)? தூறுவதோ பொழிவதோ மேகத்தின் முடிவு விழும் அத்தனையும் மீண்டும் வந்து சேராது என்று மேகத்திற்கு எப்போதோ தெரியும் ... எறும்பும் ஆமையும் ஒன்றென கருதும் உங்களிடம் வேகம் குறித்து விவாதிப்பது வீண். பெயரிடப்பட்ட அத்தனை தெய்வங்களுக்கு பின்னும் பெயர் தெரியா சிற்பியும், உளியும் உண்டு.... எல்லா அர்ப்பணிப்பின் எதிர் வினையில் ஏமாற்றமும், இகழ்ச்சியும் உண்டு என்பது அறிவோம்.. அறியாமல் போனது இதை பற்றிய விளக்கங்களும், விவாதங்களும் நிகழ்த்துவது நம் நேசத்திற்குரியவர்கள் என்பது.</p>
