திண்டுக்கல் மாவட்டத்தில் அமைதியைக் குலைக்கும் மதவெறி சக்திகள் மக்கள் ஒற்றுமை-மத நல்லிணக்கம் காக்க மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் நிற்கும்
12 Jan 2026, 6:02 pm
<p><strong>திண்டுக்கல் மாவட்டத்தில் அமைதியைக் குலைக்கும் மதவெறி சக்திகள் மக்கள் ஒற்றுமை-மத நல்லிணக்கம் காக்க மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் நிற்கும்</strong></p>
<p>ஆர். சச்சிதானந்தம் எம்.பி., பேட்டி திண்டுக்கல், ஜன.12- திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து- கிறிஸ்தவர்களிடையே மத வெறிப் பிரச்சாரத்தை மேற் கொள்ளும் சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மத நல்லிணக்க முற் போக்கு இயக்கம் உருவாக்கப் படும் என்று மக்களவை உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் கூறினார். திங்களன்று கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: சமீபத்தில் திண்டுக்கல் வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைய பகுதிகளில் கிறிஸ்தவ மக்களால் இந்துக்கள் தாக்கப்படுவதாக ஒரு தீயை கொளுத்திப் போட்டார். மேலும், இந்துக்கள் சிறுபான்மையினராக வாழக்கூடிய சூழல் உருவாகி இருப்பதாகவும் விஷமத்தன மாக கூறியுள்ளார். அவருடைய நோக்கம் இந்து - கிறிஸ்தவ மக்களி டையே மோதலை உருவாக்குகிற பாஜக போன்ற கட்சிகளுக்கு உதவு வதே! இந்து முன்னணி, இந்து மக் கள் கட்சி, சிவசேனா போன்ற அமைப்பு களும் தொடர்ந்து விஷமத்தன மான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வக்கம்பட்டியில் ஒரு பாதை பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள் ளது. அதேபோல பஞ்சம்பட்டியில் ஒரு பாஸ்க்கு மைதானத்தில் பிரச்ச னை ஏற்பட்டுள்ளது. பெருமாள் கோவில்பட்டியில் கோவிலில் தீபம் ஏற்றுகிற பிரச்சனை ஏற்பட்டு ள்ளது. சின்னாளபட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நிலத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது. பழனியில் சாலையோர வியா பாரிகளை நீதிமன்றத்தை கொண்டு அகற்றி இருக்கிறார்கள். சாலை யோர வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தர விற்கிணங்க உயர்மட்டக் குழு கூடி அங்குள்ள சுற்றுலா பேருந்து நிலையங்களை கையகப்படுத்த வில்லை. ஆனால் சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசாமி கோவிலில் கூட அர்ச்சனை சீட்டுகளை ஆய்வு செய்வதாக கூறி பிரச்சனை செய்தனர். இப்படி, பல்வேறு பெயர்களில் இயங்கக் கூடிய இந்து முன்னணி போன்ற அமைப்புகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து விஷமத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து - கிறிஸ்தவ மக்களிடையே மதவெறி கருத்துக்களை பரப்புகிறார்கள். இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்குவதற்கான முயற்சி களை மேற்கொள்கிறார்கள். மதநல்லிணக்கம் திண்டுக்கல் மாவட்டம் மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம். இந்த மாவட்டம் காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயர் வைத்த போது கூட மக்கள் ஒற்றுமை மூலம் மத நல்லி ணக்கத்தை காத்த மாவட்டம். அத்த கைய பெருமைமிகு வரலாறு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உண்டு. இந்த மாவட்டத்தில் மதரீதி யாக பிரச்சனைகளை தூண்டி பாஜக போன்ற கட்சிகள் தேர்தல் ஆதாயம் அடைய எண்ணு கிறார்கள். இந்த நிலையில் வளர்ச்சிக்கான தேவை குறித்து கவலைப்படாமல் இந்து- கிறிஸ்தவர் என்று மக்களின் ஒற்றுமைக்கு எதிரான சீர்குலைவு வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கத்தை கட்டுவதற்கான முன்னெடுப்பை எடுக்க உள்ளோம். அது மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், தொழில், விவசாய வளர்ச்சி தொடர்பாகவும் பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளோம். பிப்ரவரி மாதத்தில் இயக்கம் நடத்த முடிவெடுத்துள் ளோம். இந்த இயக்கத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆஸாத் ஆகியோர் உடனிருந்த னர்.</p>
